பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஊன்றுகோல்


கொண்டவ ராதலின் கூர்ந்ததன் மதியால்
வளம்பெறு தமிழில் வடமொழி நூல்களைத்
திறம்படப் பெயர்த்துத் தென்மொழி வளர்த்தார்;100
மொழிபெயர்த் துதவலும் முன்னையர்
கண்ட மொழிப்பணி யாகும் எனவே முனைந்து
தேர்ந்து சிலநூல் தெள்ளிய தமிழில்
ஒர்ந்து மொழிபெயர்த் துதவினர் இவரே;
தலைப்படு செல்வ வளத்தவன் ஆயினும்105.
இலக்கிய ஆர்வலன் மொழிச்சுவை தேர்ந்தவன்
நாத்திறம் பெற்றவன் நற்புகழ் உற்றவன்
சூத்திர கனெனச் சொலப்படும் அரசன்
யாத்ததோர் நாடக நூலினைப் பெயர்த்துப்
பண்ணுயர் தொழில்வலார் மண்ணியல் சிறுதேர்110
எண்ணும் வகையால் இயற்றித் தந்தனர்
ஒவ்வோர் உறுப்பும் செவ்விதின் அமைந்து
கவ்வும் எழிலாற் காண்பவர் உளத்தை
ஈர்த்திங் குலவிய தத்தேர்
பார்த்தவர் வழங்கினர் பாராட் டுரையே;115 .
'தச்சிட்டுச் சூத்திரகன் செய்த ளித்த
தனிநெடுந்தேர் நிலைபெயரா தங்கு நிற்க,
அச்சிட்டுப் பூணிறுவி [1] ஆர மெல்லாம்
அழகுறுத்துத் தமிழகத்தில் ஒட்டு வித்தான்
நச்சிட்ட [2] ஒருகுலத்தார்க் குரித்தே என்று
நவில்நாளில் அத்தொழிலில் வல்லா னாகி
மெச்சிட்ட புகழ்படைத்துச் சிறந்து நின்றான்
மேவுகதி ரேச னென ஒருவர் [3]சொன்னர்1


  1. பூணிறுவி-பூண்+நிறுவி
  2. விரும்பப்பட்ட
  3. வயிறு
    நாக. ராம, அ. இராமநாத ச்செட்டியார்