பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



இணைப்பு 1


சேதுபதி மன்னரது மறைவு, அடக்கம் பற்றி, சென்வனை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையின் பொறுப்பு அலுவலர், தளபதி பர்க்லி சென்னை கவர்னருக்கு 1-2-1809 தேதி அனுப்பிய அறிக்கை நகல் (தமிழில்)

" ......அரசின் ஆணைப்படி இந்தக் கோட்டையில் பாதுகாப்புக் கைதியாக வைக்கப்பட்டு இருந்த இராமநாதபுரம் மன்னர் முத்து இராமலிங்க சேதுபதி, நோயாளியானதால், மருத்துவ உதவி அளிக்குமாறு மருத்துவரையும் உதவி தளபதியையும் அறிவுறுத்தினேன். அவர்களும் முறையாக அவரை கவனித்து வந்தனர். மன்னரது நிலை நாளுக்குநாள் மோசமடைந்து வந்ததால், அவருக்கு இடமாற்றம் அளிப்பது தேவை என்று தெரிவித்ததால், நானும் அதற்கு இசைந்தேன். அவ்விதமே 22-ம் தேதி ஒரு பாதுகாப்பு வீரர் பொறுப்பில் அவரை ஜார்ஜ் டவுனுக்கு அனுப்பி வைத்தேன். ஆனால் 24-ம் தேதி இறந்து விட்டதாக (மருத்துவர்) மிஸ்டர் ஒயிட் எனக்கு, அறிக்கை செய்தார்.

அவரது அடக்கப்பணிகளை மேற்கொள்ளுமாறு சென்னை சர்க்காரியாபுரம் வெங்கிடாசலம் செட்டி என்ற கனவானை . கேட்டுக் கொண்டேன். அதனை, எல்லாவகையிலும் சிறப்பான முறையில் இறந்த மன்னரது தகுதிக்கும் அவரது சாதி ஆசாாப் படிக்கும் நடத்தி வைக்குமாறு. இதனை மன்னருக்கு மாதம் தோறும் வழங்கிவந்த படிச்செலவான ரூபாய் ஆயிரத்தில் இருந்து செலவு செய்து கொள்ளலாம் என்று. எனக்கு கிடைத்த தகவல்களின்படி, அந்த ஈமச்சடங்குகள், மன்னரைச் சார்ந்து இங்கிருந்தவர்களின் அறிவுரைப்படியும், அவர்களுக்கு மனநிறைவு கொள்ளும் வகையிலும் மிகத்திரளான மக்களது முன்னிலையிலும் நடைபெற்றுள்ளன.

இவைகளை அரசினர் ஒப்புதல் வழங்குவார்கள் என்று நம்புகிறேன். எனக்கு அதிகாரமளிக்கப்பட்டிருந்த செலவான ரு 1000/யும் வழங்குமாறு கோருகிறேன். அந்தச் செலவிற்கான முழுப்பட்டியல் இணைக்கப்பட்டு இருக்கிறது. இந்தச் சடங்கில் பயன்படுத்தப்பட்ட சில சாமான்களின் அளவு சடங்