பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162

எஸ். எம். கமால்

இராமசாமித் தேவர். நெருஞ்சித் தேவர் ஆகியோர் பற்றிய ஆவணங்கள் எதுவும் கிடைக்கப் பெறவில்லை. மாற்றானது ஆதிக்கம் மறவர் சீமையில் எற்படுவதைத் தடுத்த மாபெரும் குற்றத்திற்காக பரம்பரை அரசு உரிமையையும் பெருமைக்குரிய அரண்மனையையும். சொந்த உடமைகளையும் பகற்கொள்ளைகாரர்களான பரங்கியர்களிடம் பறிகொடுத்து, நாற்பத்து எட்டு ஆண்டு வாழ்வில் இருபத்து நான்கு ஆண்டுகளை இதந்தரு மனையில் நீங்கி, இடர்மிகு சிறையில் கழித்து அங்கேயே தமது வாழ்வை முடித்த அந்தச் சுதந்திரச் செம்மலின் குடும்பம், சமுதாயத்தின் பார்வையில் இருந்து விடுபட்டு, சிதைந்து. சீரழிந்து. மறைந்தது வரலாற்றின் வேதனை நிறைந்த பகுதியாக விளங்குகிறது.

2. ஆற்காட்டு நவாப்

இந்திய பேரரசராக இருந்த அவுரங்க ஜேப் தக்கானததில் உள்ள பேராரையும் கோல்கொண்டாவையும் கி.பி. 1685 88-ல் வெற்றிக் கொண்டார். செஞ்சிக்கோட்டை வரையிலான அவரது ஆதிக்கத்தில் உள்ள தென்னிந்திய பகுதிக்கு ஜு்ல்பிகார்கானை நவாப்பாக நியமனம் செய்தார். கி.பி. 1691-ல அவர் ஆற்காட்டை தலைமை இடமாகக் கொண்டு கர்நாடக நவாப் என இயங்கி வந்தார். முகலாய பேரரசரது மரணத்தியகுப் பிறகு, கிழக்கு, மேற்கு, தெற்கில் உள்ள அவரது பிரதிநிதிகள் சுயேச்சை பெற்றனர். தக்காணப் பிரதிநிதியான நிஜாம், கர்நாடக நவாப்பான சாததுல்லாவை ஆற்காட்டு நவாப்பாக நியமித்தார். அவரும் ஆற்காட்டில் இருந்து கொண்டு வேலுர் . தஞ்சை, மதுரை ஆகிய ஊர்களில் உள்ள நாயக்க மன்னர்களிடம் கப்பம் வசூலித்து வந்தார்.

இவருக்கு வாரிசு இல்லாததால், அவரது சகோதரரின் மகன் தோஸ்து அலி கி.பி. 1732-40-ல் நவாப்பாக இருந்தார். அவரது உறவினரான சந்தா சாகிபு திருவாங்கூர் வரை படை எடுத்துச் சென்று கர்நாடகம் முழுவதையும் நவாப்பிற்கு கட்டுப்பட்டதாகச் செய்தார். கி.பி. 1740-ல் தோஸ்து அலி மராத்தியருடன் நடத்திய தமலாச்சேரி போரில் இறந்தார். அவரது மகன் ஸப்தார் அலி மராத்தியருக்கு கட்டுப்பட்டு நவாப்பாக இருந்தார். இதனைத் தொடர்ந்து சந்தாசாகிபு அரசியல் கைதி