பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்

167


அவரது நிர்வாகத்தில், சேது நாடு பல புதிய மாற்றங்களைக் கண்டது. அவரது ஆர்வம் மிக்க நடவடிக்கைகளுக்கு மன்னரது முழு ஆதரவும் இருந்ததால் பிரதானி தமது பணியை எளிதாக நிறைவேற்றி வந்தார். நாடு முழுவதும் உள்ள விளை நிலங்களை அளவு செய்து அவைகளுக்கு உரிய தீர்வையை நிகுதி செய்தார். இயற்கையாக அமைந்துள்ள மண் வளத்திற்கு அக்கவாறு தீர்வையின் தரமும் அளவும் அமைக்கப்பட்டன. கண்மாய்களும் வரத்துக்கால்களும் செப்பனிடப்பட்டன. பல ஆண்டுகளுக்குப் பிறகு ரெகுநாத சமுத்திாம் என வழங்கப்பட்ட இராமனாதபுரம் பெரிய கண்மாயும் மராமத்து செய்யப்பட்டன.

இன்னும். கோயில்களைப் பராமரிக்க தரும மகமை, ஜாரி மகமை என்ற இரு பொது நிதிகள் தோற்றுவிக்கப்பட்டன. மானியமாக வழங்கப்பட்ட நிலங்கள் மான்யதாரர்களால் தனியாருக்கு மாற்றப்படும் பொழுதும், தரிசு நிலங்கள் விளைநிலமாக மாற்றப்படும் பொழுதும், அவைகளும் வரிவிதிப்பிற்குள் கொண்டு வரப்பட்டன. நெசவாளர்களிடமிருந்து கைத்தறி துணியை வாங்குகின்ற வணிகர்களும் ஒப்பந்தக்காரர்களும் இடைத்தரகர்கரும் புதிய வரியொன்றை செலுத்துமாறு செய்தார். இத்தகைய புதிய இன வருவாய்களினால் திருக்கோவில்களும் மடங்களும், அன்னச் சத்திரங்களும் சிறப்பாக செயல்பட்டன. இவரது இன்னொரு சிறப்பான சாதனை வறட்சிமயமான மறவர் சீமைக்கு வருடம் முழுவதும் வைகை ஆற்று நீர் கிடைக்கத் தீட்டிய திட்டமாகும். மதுரை மாவட்டத்தில் வர்ஷநாட்டு மலைமுகட்டில் தோற்றம் பெறும் வைகை ஆற்றின் முழு அளவு தண்ணிரும் மறவர் சீமைக்கு கிடைக்கச் செய்வதுதான் அந்த திட்டம். சேதுபதி மன்னரது நிதி உதவியை மட்டும் கொண்டு அதனை நிறைவேற்ற இயலாத நிலை இருந்ததால் அந்த திட்டம் அப்பொழுது செயல் வடிவம் பெறவில்லை. அத்துடன் இந்தப்பிரதானி சேதுபதி மன்னரது சேவையில் நிலைத்து இருக்க வில்லை.

நாளடைவில், பிரதானியின் ராஜவிசுவாசம் குறைந்து, கும்பெனியாரிடத்து கூடுதலான விசுவாசம் கொண்டார். மன்னரது தன்னரசு நோக்கங்களுக்கு அவர் இடையூறாக இருப்பதையும், இராமனாதபுரம் சமஸ்தான போது நிதியில் பல ஆயிரக் கணக்கான ருபாய் செலவுகளுக்கு விவரம் அளிக்க இயலாதவ