பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 I களுக்கு வழங்கப்பட்ட விருதுதான் கூலிகள்'" இருளடைந்த நாடு என்று எவரோ சொன்னர். அந்த இழிவும் ஒருபெருமை எனஎண்ணி வாழ்ந்த அடிமைநிலை. அப்பொழுது ஆங்கிலேயரின் குடியேற்ற நாடுகளான கயான டிரினிடாடு, ஜமைக்கா, உகாண்டா, நேட்டால், மொரீசியஸ், இலங்கை, சரவாக், பிஜி, ஆகியவைகளில் மண்டிக்கிடந்த இயற்கை வளங்களை பெருக்குவதற்கு ஏராளமான மனித சக்தி தேவைப்பட்டது. குறிப்பாக கரும்பு, வாழை, கோக்கோ, ரப்பர், தேயிலை தோட்டங்களை அமைத்து காக்க கறுப்பர்களின் கடுமையான உழைப்பு இன்றியமையாததாக இருந்தது. ம்ானமும், வீரமும் மடிந்து விட்ட காலை உயிரையும், tட்லையும் வளர்ப்பதற்கு நம்மவர்கள் கடலையும் கடந்து அங்கெல்லாம் கூலிகளாகச் சென்றதில் வியப்பில்லைதான். காடு மேடுகளைத் திருத்திய கரங்கள் அவர்களுடையது. காலமெல்லாம் உழைத்து உருக்குலைந்தது அவர்களது மேனி. கிள்ளிய தேயிலைக் கொழுந்தைப் போல ஒய்வு ஒழிவு இல்லாமல் க ரி ந் து பொசுங்கியது அவர்களது வாழ்க்கை. குளிரிலும், பனியிலும், மழையிலும் நனைந்து மலைகளின் கொடு முடிகளிலும் காடுகளிலும் தேயிலையையும், ரப்பரையும் காத்து வளர்த்து இலங்கையின் தேசிய செல்வப் பெருக்கத்துக்கு உறுதுணையாக இருந்தவர்கள் இலங்கை இந்தியர்கள். நான்கு-தலைமுறைகளாக அவர்கள் நல்கிய உழைப்பு சிந்திய கண்ணிர், வியர்வை, ரத்தம் இலங்கைத் தேயிலைக்கு உலகச் சந்தையில் உயர்ந்த நிலையையும் அன்னியச் செலாவணியையும் ஈட்டிக் கொடுத்திருப் பதை எவரும்மறுக்க முடியாது. என்ருலும் வரலாற்