பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22.3


---

தோறும் அருளானந்தரின் நினைவு நாளன்று அங்கு சென்று தரிசித்து திரும்புகின்றனர். Ο சங்கம் கண்ட சான்ருேர் செந்தமிழுக்கும் இந்து சமயத்திற்கும் அளப்பரிய திருப்பணிகளைச் செய்தவர்கள் 蠍"鷺 சேது மன்னர்கள் இவர்களது வழியினர் உக்கிர பாண்டியன் என்ற வள்ளல் பாண்டித்துரைத்தேவர் இராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகியும் பெரும் புலவருமான சிவஞானத்தேவரது மூன்ருவது மகனுக. கி. பி. 1867 இல் இராமநாதபுரத்தில் பிறந்தார். கருவிலே திருவுடைய இந்தப் பெருமகன், இளமை யிலே தமிழிலும் ஆங்கிலத்திலும் தெளிந்த ஞானம் பெற்றுத் திகழ்ந்தார். புலவர் பெருமக்கள் இவரை சேக்கிழாராகக் கண்டு மகிழ்ந்தனர். அத்துடன் வள்ளலை 'சுவாமிகள் என மிகுந்த மரியாதையுடன் வணங்கிப் போற்றினர். அவரது மாளிகையான சோமசுந்தர விலாசம் முத் தமிழ்க் கலையரங்காக விளங்கியது. ஜமீன் பொறுப்பை ஏற்றுக் கொண்ட வள்ளல் தமது ஜமீன் வருவாய் அனைத்தையுமே தமிழுக்கும், ஏனைய திருமங் களுக்கும் அள்ளி அள்ளி வழங்கினர். நாள் தவருமல் இராமநாதபுரம் நோக்கி வந்த நலிந்தவர்களின் திறமை நாடு முழுவதும் பயன்படும் வகையில் நல்லதொரு திட்டங்காணச் சிந்தித்தார். அந்நிய ஆதிக்கத்தினால் அழிந்து கொண்டிருந்த மிழகத்தின் கலைகளைப் பேணவும், தமிழையும், ஏட்டு நிலையில் இருந்த தமிழ் நூல்களையும் காத்து