பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 முதலான கிராமங் களை மாறவர்மன் சுந்தர பாண்டியன் கி.பி. 1224 இல் தானமாக வழங்க உத்தரவிட்டான். -ஏ. ஆர். 116 - 1903 5 கி.பி. 1218இல் தேவிபட்டினம் போக்கீஸ்வர முடைய நாயனர் திருக்கோயில் நான தேசிக திருவாசலுக்கு வருகை தந்த பலநாட்டு வணிகர் குழுவினர், தேவிபட்டினத்திலும் ஏனைய துறைமுகங்களிலும் கொண்டு செல்லும் சிறுபடகிற்கு அரைப்பணமும், தோணிக்கு காற் பணமும், கலங்களில் ஏற்றப்படுகிற சரக்கு களின் கட்டு ஒன்றிற்கு அரைக் காற்பணமும் ஒரு ஆள் சுமைக்கு ஒரு மாப்பணமுமாகக் :கொடுக்க இசைந்தது. - i. - - ஏ. ஆர். 119-1903 6 தீர்த்தாண்ட தானம் கோயில் முன்னர் குடி இருந்த பலநாட்டு வர்த்தகக் குழுக்களில் ஒரு பிரிவின்ரான அரபுநாட்டு குழுவினர் (அஞ்சு வண்ணத்தினர்) அந்தக் கோயில் திருப்பணிக்கு உதவ முன் வந்தனர். இந்த நிகழ்ச்சி கி.பி. 1269இல் நடந்தது. -ஏ. ஆர். 598-1926 7 கி.பி. 1 198 இல் அழகை மாநகரில் கூடிய பதினெட்டு மண்டலங்களின் அறங் காவலர்கள் அந்தப் பகுதியில் உள்ள தேவரடியார், அப் பகுதியில் உள்ள பல திருக்கோயில்களுக்கும் ஆற்றிய புனித சேவைக்காக, புதியதிருமேனிகள் செய்து வைத்து, புதிய பிரகாரங்கள் கட்டு வித்ததற்காக அவளுக்கும் அவளது குடும்பத்