பக்கம்:அகத்திய முனிவர்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



                             அகத்திய முனிவர்.


    மக்களெல்லாரும் ஒத்த பிறப்பினை யுடையராயினும் சிலர் தத்தம் சித்த நிலையால் சிறந்திருக்கின்றனர். மனத் தூய்மையும் வாய்மையும் மருவியுள்ள உயிரே அறிவுநல மெய்தி என்றும் பெருகியுள்ளது. அது மிக உன்னத நிலையில் நாளடைவில் உயர்ந்து திகழ்கின்றது. விண்ணில் காணப்படும் தாரகைக் கணங்களுள் சந்திரன் விளங்கி நிற்றல்போல் இம்மண்ணில் காணப்படும் மக்களுள் குணநல முடைய மேலோர் மிகச் சிறந்து விளங்கி நிற்கின்றனர். அவரது உணர்வொளியால் பிறவுயிர்கள் பலவகை நலங்களை யடைந்து உயர்வுறுகின்றன. மழைத்தாரைபோல் புனி தமாயும் இனிமையாயும் எங்கும்பரந்து அவரது குணநலங்கள் என்றும் குன்றாமல் நின்று எல்லாவுயிர்களுக்கும் இன்பம் ஊட்டி வருகின்றன. காலத்தானும் இடத்தானும் பிரிக்கப் பட்டு அவர் மிக்க சேய்மைக்கண் இருந்தாலும் என்றும் எங்கும் அவர் தன்மைகள் நமக்கு அண்மைக்கண் அமைந்து தண்ணளி சுரந்து நன்னயம் புரிகின்றன.
    இத்தகைய மேலோர்கள் காலந்தோறும் அவதரித்து இஞ்ஞாலம் உய்ய வந்துகொண்டே இருக்கின்றார்கள். உண்மையை ஊன்றி நோக்கின் இறைவனது அருளொளிகளாகவே தெருளுற்று இவர்கள் ஒளிர்தருகின்றார்கள். இங்ஙனம் உயர்ந்தொளிரும் மேன்மையாளரெல்லாரும் வியந்து போற்றும் பெருந்தகையாய் நமது அகத்திய முனிவர் விளங்கி நிற்கின்றார்.
    அகத்தியர் என்பார் இற்றைக்குப் பல்லாயிர ஆண்டு கட்கு முன்னர் ஈண்டு அவதரித்து நின்ற ஒர் பெரியார் என்பதை அறியார் மிக அரியர். இவர் அருந்தவக் கொள்கையில் திருந்தி விளங்கிய பெருத்தகையாளர். வைய முய்ய