பக்கம்:அகத்திய முனிவர்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருப்பு. 33 க்து, இனிய நீதிகள் பல தெளிந்து, உயிர்களின்புறத் தமி ழையும் அரசையும் நன்கு பாதுகாத்து வந்தான். இம் மூன் மும் சங்கம் ஆயிரத்தெண்னுாற்றைம்பது(1850)ஆண்டுகளாக நன்கு நடைபெற்று வந்தது. அச்சங்கத்தில் நாற்பத்தொ ன்பது புலவர்கள் அங்கத்தவரா யிருந்து தமிழை ஆராய் ந்து வந்தார். அவரனவரும் இவாருள்வழி ஒழுகித்தெருள டைந்து திகழ்ந்தார். - . - முதல் இடை கடை என்னும் மூன்று சங்கங் களிலும் இவர் அமர்ந்து அருங்கலை வினேதராய் விளங்கி யிருந்தார். இவரது உணர் வொளியால் துண். மாண் நுழைபுல முடையராய்ப் பன்மாண் குணங் களும் அமைந்து, தண்ணளி கிறைந்து, விண்ணவரும் புகழ எண்ணரிய புலவர்கள் கண்ணியிருந்தார். அவ்வக்காலத்து அவர்கள் பாடியுள்ள நூல்கள் பல. அவற்றுட் சில பெருங் குருகு, சிறுகுருகு, வேண்டாளி, வியாழமாலை, களரியா விரை, செயிற்றியம், பரதம் என்பன போலக் கேட்கப் படுவனவே யன்றி இக்காலத்தில் அவைகாணப்படுவன வல்ல. மேற்குறித்த சங்கங்களின் கிலேமையையும், எங்கும் பொங் கொளி பாப்பி இஞ்ஞானபானு அங்குத் தங்கியிருந்த தலை மையையும் பல நூல்கள் வியந்து கூறியுள்ளன. அடியில் வரும் பழையபாடல் ஒன்றிலும் இவை இனிதுணரலாகும் அது வருமாறு காண்க: க. முதற்சங்கம். வேங்கடங் குமரி தீம்புனம் பெளவத் திங்கான் கெல்லையின் இருந்தமிழ் பயின்ற செங்காப் புலவர் செய்தியீண் டுரைப்பின் ஆடகக் குடுமி மாடக் கூடலின் 5