பக்கம்:அகத்திய முனிவர்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 அகத்தியமுனிவர். அமரகணங்கள் யாவரும் அக்காட்சியைக் காணவந்து களி கூர்ந்திருந்தனர். இந்திரன் வலப்புறத்தே இம் முனிவர் பெருந்தகை மாட்சியோடு இனிது வீற்றிருந்தார். அவள் சதிமிதித்து முதன்முறை இனிய இசையேடு அழகொழுக வெளி வந்தாள். அவ்வமயம் அங்கிருந்த இந்திர குமாரனாகிய சயந்தன் காதல்மீக் கூர்ந்து அவளைக் கனிந்து நோக்கினான். 'கண்ணின்மேற் கலந்தாளோ? கருத்தின்மேற் புகுந்தாளோ? பண்ணின்மேல் வரிச்சுரும்போ? தும்பியோ? படர் மயிலோ?" என்று அவன் இடருமுத்தான். அவளும் அவன்மீது தன் கண்ணேச் செலுத்தினுள். இங்ஙனம் கள்ள விழி போராட அவள் உளளகிலை மாறிள்ை; மாறினும் தான் உற்ற கடனத்தை ஊக்கி வந்தாள். வரினும்' அதில் துண்ணிதாய் நேர்ந்து வரும் வழு வினை நாாதர் தனித்தறிந் தார். கலகப்பிரியராதலால் அப் பிழை విడ్సిపో இவர் காணவேண்டுமென்று கருதித் தனது யாழில் மீறிப்ட ஒர் காம்பினைப் பனித்துக் காட்டிஞர். முன்னதாகவே அவ் வுண்மையை நன்கறிந்திருந்தும் தண்ணளியுடையாதலால்' புன்னகைசெய்த பொறுத்துவந்த இவர் அவர் செய்ததைக் கண்டவுடனே கடுத்து அச் சயந்தனை மூங்கிலாகவும், அவ ளேக் கணிகையாகவும், அவ் விணையை மாணிழந்த மன்ை யாகவும், மண்ணில் போய்த் தங்கும்படி சபித்தார். இவர் சினந்தவுடனே நாகரே நடுங்கினர் என்ருல் வேறு கூறுவ தென்? இந்திரன் அஞ்சி யெழுந்து காமக்களிப்பால்தேர்ந்த இப்பிழையினைப் பொறுத்தருளி இட்ட சாபத்திற்கோர் முடிவினை அடிகள் ஆற்றியருளவேண்டுமென்று போற்றி வேண்டினன். அவ்வாறே கருணைசெய்து ஒரு காலவரை யறையை அருள்புரிந்துவிட்டு இவர் அகன்று ே ாயினர்.