பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 199


தமிழ்நாடு ஆவணக்காப்பக ஆவணம்:)

ஆனால் சிவகங்கை அம்மானையில் (பக்கம் 127)

"மாதுதனைக் கைப்பிடித்து வாவெளியே என்றழைத்து
வரவே உள்மண்டபத்து வாச வெளி மூலை தன்னில
உரமாய் வரும்பொழுது உபாயமுள்ள கம்பெனியார்
........கலீரெனவே சுட்டானே பூரிதுரை
கப்பித்தான் சுட்டகுண்டு கன்னியர்க்கும் மன்னருக்கும்
ஒப்பிலையாய்ப்பட்டு ஊடுருவிப் பாய்ந்ததுவே"

போரிலே வீரமரணம் அடைந்து பொன்றாப் புகழ்பெற்ற முத்து வடுகநாத மன்னரது தியாகத்தைச் சிறுமைப்படுத்தும் வரிகள் இவை.

ஆ. மருது சகோதரர்கள் மன்னர் முத்து வடுகநாதரது அரண்மனைப் பணியாளராகத்தான் இருந்து வந்தனர்.

சிவகங்கை அம்மானை (பக்கம் 122)

"மன்னவனார் முத்து வடுக துரை தம்மிடமும்
தன்னவர்களாயிருக்கும் தளவாய் மருதிடமும்..."

"தளவாய் மருதிருவர் தான் கதிரோன் வந்த பின்னர்..." (பக்கம் 123)

என்று தளவாய் (படையணிகளின் தளகர்த்தர்) பதவியில் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அம்மானை பாயிரத்தில் மருது சகோதரர்களை மேலும் உயர்த்தி

"சிவகங்கை நகராள் மன்னன். தெம்புள மருது தன்னை" "சிவகங்கை புவிக்கொண்ட மன்னவன் மருது தன்னை"

என்று புகழ்ச்சியின் உச்சியிலே வைத்து பொய்யுரைக்கப்பட்டுள்ளது. மருது சகோதரர்கள் காலத்தில் சிவகங்கை மன்னர்களாக மூவர் இருந்துள்ளனர் என்பது வரலாறு. முதலாவது மன்னர் முத்து வடுகநாதர் (கி.பி.1750-1772), ராணிவேலு நாச்சியார்(கி.பி.1780.1789) வேங்கன் பெரிய உடையாத் தேவர் (கி.பி.1790-1801) இவர்களையெல்லாம் மறந்து விட்டு புனைந்துரைக்கிறது அம்மானை.

இ. ராணி வேலு நாச்சியாரின் ஆட்சிக் காலத்தில், ராணி வேலு நாச்சியாருக்கு அவரது பிரதானிகளான மருது சேர்வைக்காரர்களுக்குமிடையில் பலமான கருத்து வேறுபாடுகள் எழுந்தன. இதன் காரணமாக மருது சேர்வைக்காரர்கள் மே 1789-ல் சிவகங்கை அரண்மனையை முற்றுகையிட்டனர். இந்த