பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 235


எவ்விதம் எழுத முடியும்? அரண்டவனுக்குத்தான் இருண்டதெல்லாம் அச்சமூட்டும். சமன் செய்து சீர் தாக்கி நிகழ்ச்சிகளை ஆய்வு செய்பவர்களுக்கு இந்த ஆவணங்கள் புறக்கணிக்க முடியாத வரலாற்றுப் புதையலாக அமையும்.

அடுத்து, மருது சகோதரர்கள் மன்னர்களாக இருந்தனர் என்பதைக் குறிக்க ஆசிரியர் வரலாற்று ஆவணம் எதையாவது சுட்டியிருக்கின்றனரா என்றால் இல்லை. கி.பி.1780-1801 வரை மருது இருவர் தொடர்ந்து மன்னராக இருந்தபொழுது, அவர்களுடன் தொடர்பு கொண்டிருந்தவர் கும்பெனியார். இவர்களது ஆவணங்களை ஒதுக்கி விடுவோம். அடுத்து இவர்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் புதுக்கோட்டை தொண்டமான, இராமநாதபுரம் சேதுபதி மன்னர் ஆகியவர்கள் மட்டுமே. அவர்களது ஆவணங்களில், அந்தச் சீமை வரலாற்று நூல்களில், இவர்கள் சிவகங்கைச் சீமை மன்னராக இருந்தனர் என்பதற்குரிய குறிப்புகள் இருக்கிறதா என்றால் இல்லையே பிறகு எந்த ஆதாரத்தைக் கொண்டு அவர்களை உயர்த்திக் காட்டுவது?

பக்கம் 261

"மருதிருவரின் தந்தை சேதுநாட்டில் சேதுபதியிடம் ஒருபடைத் தலைவராக இருந்து வந்ததற்கு தொல்லியல் சாசன ஆதாரம் உள்ளது' என்ற கூற்றுக்கு நண்பர், வேதாசலம் அவர்கள் 'கல்வெட்டு' இதழ் எண்.18-ல் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ள அனுமந்தக்குடி ஒலைச்சாசனம் சுட்டப்பட்டுள்ளது. இந்த ஒலைச் சாசனத்தில் சாட்சிக் கையொப்பம் இட்டு இருப்பவர்கள் ஒருவர் வணங்காமுடி பளநியப்ப சேர்வைக்காரர். இன்னொருவர் மேற்படி அணியாபதி அய்யன அம்பலம்.

இந்தப் பெயரில் இருந்து அதாவது, 'வணங்காமுடி பளநியப்ப சேருவைக்காரன்' என்ற சொற்றொடரைக் கொண்டு கட்டுரை ஆசிரியர், 'மருது சகோதர்களின் தந்தையார் உடையார் சேர்வை என்ற மொக்கப் பளனியப்ப சேர்வைக்காரர் தான் அவர் என்றும் அவர் முத்துராமலிங்க சேதுபதி மன்னரது படையில் பணியாற்றியிருக்க வேண்டும். அவரே இந்த ஓலையிலும் சாட்சிக் கையெழுத்து இட்டு இருக்க வேண்டும் என்ற அவரது ஊகத்தை அடுக்கியவாறு வெளியிட்டுள்ளார். இதை ஒரு தொல்லியல் சாசனமாக எப்படி ஏற்றுக் கொள்வது? சேதுநாட்டில் பளனியப்பன் சேர்வை என்று அப்பொழுது அந்த ஒருவர் மட்டும்தான் இருந்தாரா? அவரும் மருது சேர்வைக்காரரது தந்தைதானா? பொதுவாக சாட்சிக் கையெழுத்துப் போடுபவர் தனது ஊரையும் குறிப்பிட்டு கையெழுத்து இடுவது அன்றைய மரபு. வனங்காடி என்பது அந்தப் பளனியப்ப சேர்வைக்காரரின் ஊராக ஏன் இருக்கக் கூடாது? பரமக்குடி வட்டத்தில் வணங்கான் அல்லது வணங்கான் ஏந்தல் என்று ஒரு ஊர்