பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை

4. இதனால் இது தொடர்பாக இருநாட்டு எல்லைகளில் சிறுசிறு மோதல்கள் ஏற்பட்டன.[1]

5. இதனைப் போன்றே தொண்டமான் சீமையில் பிரான்மலையை ஒட்டிய பொது மேய்ச்சல் தரை, காடு பற்றிய எல்லைத் தகராறுகள்.

6. எமனேஸ்வரத்தில் நடந்த மோதலில், இராமநாதபுரம் படைகளால் கொல்லப்பட்ட பெரிய மருது சேர்வைக்காரரது மகனது மரணத்திற்கு பழிவாங்கும் வகையில், பெரிய மருது சேர்வைக்காரரும், அவர்தம் படைகளும் பரமக்குடி மக்களில் எழுநூறுக்கும் மிகுதியானவர்களைக் கொன்று குவித்தது.[2]

7. இதனைத் தொடர்ந்து சேதுபதி மன்னரது படைகள் சிவகங்கைச் சீமைப்பகுதியான ஆனந்துர் - விசவனுர் மீது பெருந்தாக்குதல் நடத்தியது.[3]

இத்தகைய உணர்ச்சி வசப்பட்ட நிகழ்வுகளால் சாதாரண மக்களது உயிர்களும், சொத்துக்களும் மிகவும் சேதமுற்று வந்தன. பிரதானி சின்ன மருது சேர்வைக்காரரது செயல்பாடுகளைத் தடுத்து நிறுத்த இயலாத நிலையில், மன்னர் வேங்கன் பெரிய உடையாத் தேவர், கண்களை மூடிக்கொண்டு, காதுகளைப் பொத்திக் கொண்டு ஊமை போல அந்தப்புரத்தில் ஒதுங்கி இருந்தார். மன்னரது இந்த மெளனத்தினால் அந்தப் பிரதானி சிவகங்கை மன்னரை விட அதிகமான செல்வாக்குடையவராக இருப்பது போன்ற மாயத் தோற்றம் எங்கும் படிந்து இருந்தது. சிவகங்கை சீமை வரலாற்றின் இறுக்கமான இந்தச் சூழ்நிலையைப் பகுத்துணர முடியாத இன்றைய நூலாசிரியர் ஒருவர்கூட, சாதிய உணர்வின் ஒன்றுதலினால் வரலாற்றைச் சீரழிக்க முயன்று புதிய “வரலாறு” படைத்துள்ளார். இந்தப் புதிய “சிவகங்கை மன்னர் வரலாற்றிற்கு" ஆதாரமோ சான்றுகளோ தேவை இல்லை என்பது அவரது கருத்து போலும். அந்தச் சரித்திர புருஷர் மிகச் துணிச்சலாக யாரும் தெரிவிக்காத, தெரிவிக்க இயலாத உண்மைகள் பொருந்தியது அவரது நூல் அந்தப் பேருண்மைகளில் ஒன்றுதான் கி.பி.1780 முதல் 1801 வரை சிவகங்கை சீமையை தொடர்ந்து ஆண்ட பேரரசர்கள் மருது சேர்வைக்காரர்கள் என்பது. அதாவது அவர்கள் பிரதானிகளாகப் பணியேற்று இறுதியில் கும்பெனியாரால் தூக்கிலேற்றப்பட்ட காலம் வரை.

இராமநாதபுரம் சேதுபதி மன்னருக்கும் அகம்படியர் சாதியினைச் சேர்ந்த


  1. Military Consultations Vol.185(B) / 29.8.1794. P: 4060
  2. Ford. St. George Diary Consultations. 21.6.1794, P: 2757
  3. Military Country Correspondence Vol. 45/1794. P; 177-178