பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

222 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை


25 தேதி நடைபெற்ற போரில் மன்னர் முத்து வடுகநாதரும் ஏராளமான ஆதரவாளர்களும் போரில் மடிந்தனர். மன்னரது விதவை ராணியும் மகளும் விருபாட்சிக்கு பிரதானி தாண்டவராய பிள்ளையினால் அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் மன்னரது பணியாட்களான மருதிருவரும் அங்கு போய்ச் சேர்ந்தனர் என்பது மற்றொன்று. கும்பெனியாரது ஆவணங்கள் ஆதாரத்தில் மதுரை வரலாறு வரைந்த பேராசிரியர் கே.ராஜையன் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

இப்பொழுது ராணியார் விருபாட்சி போய்ச் சேர்ந்தது பற்றி ஜூலை 1772-ல் சென்னைக் கோட்டையில் நடைபெற்ற கும்பெனி ஆளுநரது கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட இந்தச் செய்திகளைக் கொண்ட ஆவணத்தை ஏற்றுக் கொள்வதா? அல்லது இந்த நிகழ்ச்சி நடைபெற்று ஆறுபத்து எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு (கி.பி.1840) பாடப் பெற்ற சிவகங்கை அம்மானை, மற்றும் அதற்குப் பிறகு நாற்பத்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் (கி.பி.1882)-ல் பாடப்பெற்ற கும்மியின் வரிகளை உண்மையெனக் கொள்வதா? நூலாசிரியர் அம்மானையும் கும்மியையும்தான் அரிச்சந்திர வாக்காக கொண்டிருப்பது எப்படி பொருந்தும்?

மேலும் கும்மியும் அம்மானையும் ஓரிடத்தில் கூட விருபாட்சி செல்லும் பொழுது கர்ப்பிணியாக இருந்தார் என்றோ அல்லது விருபாட்சியில் இருந்த பொழுது பெண் மகவினை (வெள்ளச்சியை) பிரசவித்தார் என்றோ குறிப்பிடாதிருக்கும்பொழுது, நூலாசிரியரது புதுமுகக் காண்டத்தில் இந்த புதுமைக் கற்பனை இடம் பெறச் செய்யப்பட்டியிருப்பதின் நோக்கம் என்னவோ? இது சம்பந்தமாக சிவகங்கைச் சீமை நூலாசிரியருக்கு குழப்பம் என்று குறிப்பிடும். இந்த நூலாசிரியரது எழுத்துக்களிலும் தெளிவு காணப்படவில்லை. இவருக்குத்தான் குழப்பம் குவிந்துள்ளது.

பக்கம் 137-138

தளபதி புல்லர்ட்டின் அறிக்கையில், "மருதிருவருடன் இளைய ராஜாவும் காளையார் கோவில் காட்டிற்கு ஓடினர் என்ற செய்திக்கு விளக்கம் செய்துள்ள நூலாசிரியர், புல்லர்ட்டன் குறிப்பிடுகின்ற இளையராஜா, நாலுகோட்டை குடும்பத்தைச் சேர்ந்த வெங்கண் பெரிய உடையாத் தேவர் என்றும், விருபாட்சிக்கு செல்லும் பொழுது, இந்தச் சிறுவனுக்கு பெண் வேடமிட்டு அழைத்துச் சென்று கண் போல் காத்து வந்தனர் என்றும் வரைந்துள்ளார்.

இதற்கும் எந்த ஆதாரமும் இல்லை. அப்படியானால் இந்தச் செய்தியும் அரிச்சந்திரனது வாக்காகிய சிவகங்கை அம்மானை. கும்மியில் குறிப்பிடப்பட்டு இருக்கிறதா? இல்லையே வேறு பேராசிரியர்