பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

67

வளான சீதா பிராட்டியின்; சலத்தை நோக்கி – கோபத்தைக் கருதி; சிந்துரம் – செந்நிறங்கொண்ட; பவளச் செவ்வாய் – பவழம் போன்ற சிவந்த வாயிடத்தே; முறுவலன் – புன்னகை கொண்டவனாய்; அ மானினை – அந்த மானை; தொடரல் உற்றான் – பின் பற்றிச் செல்லத் தொடங்கினான்.

மிதித்தது மெல்ல, மெல்ல,
        வெறித்தது, வெருவி மீதில்
குதித்தது, செவியை நீட்டிக்
        குரபதம் உரத்தைக் கூட்டி
உதித்து எழும் ஊதை உள்ளம்
        என்று இவை உருவச்செல்லும்
கதிக்கு ஒரு கல்வி வேறே
        காட்டுவது ஒத்தது அன்றே.

முதலில் மெதுவாக அடி எடுத்து வைத்தது அந்த மாயமான்; பிறகு அச்சம் கொண்டதுபோல் மேலே தாவிக் குதித்தது. பிறகு கால்களை உடம்போடு சேர்த்துக்கொண்டு காற்றினும் கடுவேகமாக ஒடிய தன்றே.

மெல்ல மெல்ல மிதித்தது – (அந்த மாயமான் முதலில்) மெதுவாக அடிவைத்து நடந்து சென்றது; வெறித்தது – வெறித்துப் பார்த்தது; வெருவி மீதில் குதித்தது – அச்சங் கொண்டதுபோல மேலே தாவிக் குதித்தது; செவியை நீட்டி – தன் காதுகளை நீட்டி; குரபதம் உரத்தை கூட்டி – குளம்போடு கூடிய கால்களை மார்பில் ஒட்டினாற்போல மடக்கி வைத்துக்கொண்டு; உதித்து எழும் ஊதை உள்ளம் என்று இவை – தோன்றி மேற்கிளம்பி எழும் காற்று, மனம் என்ற இவற்றை; உருவ செல்லும் – ஊடுருவிச் செல்லும்: கதிக்கு –