பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

83

உயிரை விடாமல் அதன் மீது பற்றுக்கொண்டிருக்கும் யான் என் செயல் – என்ன செய்வேன்? (ஒன்றும் தெரியவில்லையே) என்று – என்று எண்ணி; விம்மினான் – தேம்பி வருந்தியழுதான் லட்சுமணன்.

இளையவன் ஏகலும்
        இறவு பார்க்கின்ற
வளை எயிற்று இராவணன்
        வஞ்சம் முற்றுவான்
முளை வரித் தண்டு ஒரு
        மூன்றும் முப் பகைத்
தளை அரி தவத்தவர்
        வடிவும் தாங்கினான்.

லட்சுமணன் “எப்பொழுது செல்வான்? எப்பொழுது செல்வான்?” என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தான் வளைந்த கோரப் பற்கள் கொண்ட இராவணன்.

லட்சுமணன் சென்ற உடனே சந்நியாசிக் கோலம் கொண்டான். திரிதண்டம் ஒன்றைக் கையில் ஏற்றான்.

இளையவன் – லட்சுமணன் ; ஏகலும் – சென்ற உடனே; இறவு பார்க்கின்ற – அவன் செல்வதை எதிர்பார்த்துக் கொண்டிருந்த; வளை எயிற்று – வளைந்த பற்களை உடைய; இராவணன் – இராவணன்; வஞ்சம் – தான் எண்ணி வந்த வஞ்சகச் செயலை; முற்றுவான் – செய்து முடித்தற் பொருட்டு; வரி – வரிந்து கட்டப்பட்ட; முளை – மூங்கில்; தண்டு – கோல்; ஒரு மூன்றும் – ஒன்றாகிய மூன்றும் முப்பகை – காமம், வெகுளி, மயக்கம் என்ற மூன்று