பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

141

உருக்கொண்டு பலரையும் அச்சுறுத்தி வந்தேன். ஸ்தூலசிரஸ் என்ற முனிவரையும் அச்சுறுத்தியபோது அவர் வெகுண்டு “இக் கோர உருவமே உனக்கு நிலைப்பதாக” என்று சபித்தார். பின்னர் நான் எனது பிழையுணர்ந்தேன். முனிவரை வேண்டினேன். இராமபிரான் உன் கரங்களைத் துண்டித்து எரிக்கும்போது இக்கோர உரு நீங்கும் என்றார். யான் கடுந்தவம் புரிந்தேன். நீண்ட வாழ்நாள் பெற்றேன். அதனால் செருக்குற்றேன்; இந்திரனை எதிர்த்தேன். என் கைகளும் தலையும் வயிற்றினுள் புகுமாறு செய்தான் இந்திரன். அவனை வேண்டினேன். ஒரு யோசனை தூரம் என் கைகள் நீள வரமளித்தான்.

அத்யாதம இராமாயணம் கவந்தனைப் பற்றி பின் வருமாறு கூறுகிறது.

“கவந்தன் ஒரு கந்தர்வன். பிரம்மாவிடம் வரம்பெற்றவன். அஷ்ட வச்ர முனிவரால் இந்தக் கோர உருப் பெற்றவன்.”

இராமனும் லட்சுமணனும் அங்கிருந்து நடந்தனர். நடந்து மதங்கர் ஆசிரமம் அடைந்தனர். அவர்களது வருகைக்காகக் காத்திருக்கும் சபரியைக் கண்டனர்.

இராமனைக் கண்ட சபரி அவ்விருவரையும் உபசரித்தாள். பின்னே மோட்சம் எய்தினாள். அன்றிரவு மதங்கர் ஆசிரமத்திலே தங்கி மறுநாள் பம்பாசிரஸை அடைந்தனர்.