பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

மாண்பு நிறைந்த நண்பர்கள்



அஞ்சாமை, கல்வி, அடக்கம், கருணை
எஞ்சாமல் நிரம்பிய என் வள்ளி நாயகம்,
இலகுகம் தேயம் இன்புற வுழைக்குந்
திலகன், "அாவிந்தன், கப்பாடே, ழஞ்சி
சீனிவாசன், பாரதி செப்பரும் பிறசிலர்
நானிவன் உணர்ச்சியால் நட்ட நண்பினர்.
உணர்ச்சி யொன்றும் உடன்பா டிலாது
புணர்ச்சி யொன்றால் பொருந்தினோர் அனேகர்.
பின்னாள் நெருங்கிப் பழகிய நண்பினர்
முன்னோன் ஒருவனும் மூவிரு பிறருமே.
அவருட் பெண்கள் இருவர்; மற்றையோர்
திருதெல் வேலிச் சிதம்பாம் பிள்ளை,
கந்த சாமிக் கவிராயர் !! ஜயர்,
சொந்தச் சண்முக சுந்தரம் பிள்ளை.
பழகியார் நாயையும் பரிவொடு கொண்டியான்
விழைதர ஊட்டி மேலெலாம் தடவிப்
பக்கத் திருத்திப் பார்த்துளம் களிப்பேன்.
தக்காண் பினர் செயல் சாற்றுவேன்; அவரின்
உடையினைப் புனைவேன் ; ஊழியம் புரிவேன்:
- ஐயர் - கந்தசாமி ஐயர் - தமிழ்ப்பண்டிதர்.
திலகன் - பாலகங்காதர திலகர்.
t அரவிந்தன் - பகவான் அரவிர் தகோஷ்,
3 சனிவாசன் - மண்டையன் ஸ்ரீனிவாஸாச்சாரியார்.
1 கப்பர்டே - பம்பாய் தேசியத் தலைவர் கப்பர்தே.
88

 

36