பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
 

திருநெல்வேலியில் புரட்சித் தீ.
"தெறுகள மாயது திருநெல் வேலி " எனக்
கைதிகளை அடைத்துக் கதவைப் பூட்டினர்.
செய்தி யாவும் தெரிந்தோம் பிற்பகல்
ஐனங்கள் திரண்டு சர்க்கார் தலங்களை
மனங்கொள் வண்ணம் மாய்த்தனர் தீயால் ;
பின்னர் விஞ்சு பிழையிலாச் சிலரை
உன்னாது கட்டுயிர் உண்டனன் கேண்மோ
மறுதினம் குருநாதன் வந்தனன் எம்மொடு
செறிவுற விருக்க செப்பினன் இஃதே
“ நீவீர் மூவரும் நிசிசிறை இருமெனப்

  • பாவி மொழிந்தபின் பாலகனைக் கொண்டுயான்

திருமந் திரநகர் சென்றேன் ; விடுத்தேன்,
கருமம் தொடர்ந்தது ; கலங்கற்க" என்றே
வெள்ளிக் கிழமை வீரரரா கவபுரம்
பள்ளிச் சிறுவர் பலத்தொடு கூடி
" அடைமின் கடைகளை அன்பர் சிறையுள்
அடைபட நின்றதன் அறிகுறி யாக'
என்று மொழிந்தனர். யானும் அவருடன்
நன்றென மொழிந்தேன் நாலைந் தடைத்தனர்.
திருமந் திரநகர் சென்றேன் அங்கெமக்
கருமைகள் செய்ய அநேகர் கூடினர்.
..


விஞ்சு
8

 

83