பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
 

சிறந்தநம் கப்பற்கும் சேரும்” என்றனர்,
“ஈசன் செயலை எவரே தடுப்பவர்?
நாசம் வந்திடின், நானோ நீரோ
தடுக்க இயலுமோ சாற்றரும் ஐயரே!
கொடுக்க [1]*இராஜி கூறிய கப்பலின்
வேலையைப் பின்னரே விளங்கச் சொல்லுவேன்,
ஓலையைப் போடினும் ஓடினும் நீவீர்
எனக்கொரு தடையும் இலை” என் றுரைத்தேன்,
மனக்குறை யுடனே வந்தவர் சென்று
‘மீற்றிங்’ கூட்டி “வேருடன் ஒழித்தவன்
காற்றும் படாமற் கப்பலைக் காப்பதே
கடன்” எனப் பேசினர் [2]கழறிய நண்பரோ
“திடனிலா துரையீர்: சிந்தனை செய்வீர்:
அன்னவன் நீங்கிடின் அழிந்திடும் கப்பல்
பின்னர்நம் பணமும் பெயரும் அழிந்திடும்”
எனவுரை செய்தனர். எமனவர் “அரசியல்
இனியவன் விடுதலெம் இச்சை” என் றெழுதினர்
அவ்வுரை விஞ்சுக் கறைந்தனர். எனக்கும்
செவ்வி தில் எழுதிச் சீக்கிரம் அனுப்பினர்,
திருமந் திரநகர்ச்சேவகம் பூண்டநான்
அருமந் திரத்திற் கனைவரும் [3]பேட்டைக்கு
மாலையில் வருகென வழங்கினேன் அறிக்கை.

 

  1. *இராஜி - ராஜினாமா.
  2. கழறிய கண்பர் - முன்சொன்ன அருணாசலம் பிள்ளை முதலியோர்
  3. பேட்டை - பள்ளி வாசற் பேட்டை.

70