பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

சிறையில் பெற்ற அறிவுச் செல்வம்.


பேப்பர் படித்திடப் பொருமயல்
                   உற்றியாம்
சூப்பரின்டெண்டிடம்
       சொன்னேம்.அவனுடன்
மறுத்தான்.அதன்பின் வலனுடன்
                   அவன்பின்
செறித்த பலவும் செப்பும்
                  ஹிந்துவும்
வந்தே மாதா மாட்சி பெற்றவெம்
சொந்தப் பேப்பரும்,"சுதேசமித்
                      திர"னும்
தினமும் வருத்தித் தெரியாது
                   படித்தேம்.
அனுமதி கொண்டெமக்கரும்
        பொருள் கொண்டகம்
வள்ளுவர் மறையும் மாண்புயர்
                    நல்லாப்
பிள்ளைபா பதமும் பெரும்பொருள் நிரம்பிய
பகவற் கீதையும் படித்தேம்.
                    பிந்திய
தகவல் தெரிந்திட ஜாதகம்
                   பார்த்தேம்.
ஜோசியம் பலவும் தொகுத்துள
                   நூல்சில
வாசித் துரைத்தோம்.வந்த
                  கைதிகள்
மதுரை வீரனின் வலனிறை
                   சரிதமும்
சதுர மாகச் சாக்கா பொடுபல
சண்டைகள் புரிந்து தன் திறம்
                     காட்டி
எண்டிசையும்புகழ் இயம்பிட
                    நிற்கும்
நமது * பார் சால நாயகன்
                  சரிதமும்
எமதுளம் களித்திட இன்பொடு
                    கேட்டேம்
“நாயும் புலியும் 'என தவிலும்
                   ஆட்டமும்
தாயழம் ஆடினேம்:சட்டமும்
                  பார்த்தேம்.
_____________________________
பாஞ்சால நாயகன் சரிதம்-கட்டபொம்மு நாயக்கர் சரிதம்,
90

 

90