பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

குழந்தையின் குறுக்கு விசாரணை


"ஐயா, அம்மையின் றழுகிறாள் " என்றான்.
"ஐயா. நீயும் அழுதையோ?' என்றேன்.
"அழவிலை , உன்னை அயலூர்க் கின்று
பொழுதடையக் கொண்டு போவதா மாமா
சொன்னான் ; நிசந்தானா? சொல்"லெனக் கேட்டான்.
அன்னோன் உன்னை அழச்செயச் சொல்லினன்
அஃதிருக் கட்டும், யா னயலூர் சென்றிடின்
தகுமதி கொண்டுநீ தைரியமா இருப்பையா ?"
என்றேன். அவனுடன் என்முகம் பார்த்து "நீ
சென்றால் அழமாட்டேன். செல்லுவை யோ என்னைப்
பிரிந்து நீ?" என்றான். பெருகிய தென்கணீர்
பரிந்தவன் என் முகம் பார்த்துப் பார்த்துக்
கண்ணீர் சோர்ந்திடக் கைத்துணி கொண்டென்
கண்ணீர் துடைத்தான். கருத்தழிந் தேன்பின்.
மடமையை உணர்ந்தேன் : மதியுடன் வந்தது.
திடமுடன் என்முகம் திருத்தி அவன்கண்
நீரைத் துடைத்து நெஞ்சொடு சேர்த்து
"யாரழு தாலுநீ அழாதே என்றேன்
இலை " என் றுரைத்தான் எழில்முகம் முத்தி “நீ
நலமாத் தம்பியை நண்ணியிரு" என்றென்
மைத்துனனைப் பார்த்தேன். வாங்கி அவன் சென்றான்.
அத்துணையும் என்பக்கம் அழுகையில் மூழ்கிய
சிவம், குரு நாதன், சிற்சில வார்டர்க்குத்
“ தவத்தின் பயனிது தளரற்க" என்றேன்.
எண்ணிலாப் போலீஸார் ஏகிவெளி நின்றனர்
11
100

 

100