பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவள்ளுவர் திருக்குறள்

குறள் வெண்பாக்களாலே சொல்லப்பட்ட திருவள்ளுவ நாயனாரது முப் பால்களை யுடைய புத்தகத்தின் கண்ணே, முன்னை முதுவோர் மொழி நேர் ஒவ்வாது-முற் காலத்துள்ள பெரியோரது நூல்களுக்கு நேர்தல் பொருந்தாது.

'மொழி' ஆகுபெயர். பெரியோ ராவார்---வட மொழியிலும், தென் மொழியிலும், பிற மொழிகளிலும், நூல் செய்த முனிவரும், புலவரும், பிறரும். அந் நூல்களாவன-மனு முதலியோராலே செயப்பட்ட அற நூன் முதலியன. இதன் புத்தகத்தில் முன் னூல்களி லொன்றும் சேர்க்கப்படுதற்குத் தகுவ தன் றென்று சொல்லிய படி. (௩௰௮)

உறையூர் முதுகூற்றனார்.

தேவிற் சிறந்த திருவள் ளுவர்குறள்வெண்
பாவிற் சிறந்திடுமுப் பால்பகரார் - நாவிற்
குயலில்லை சொற்சுவை யோர்வில்லை மற்றுஞ்
செயலில்லை யென்னுந் திரு.

இ-ள். தேவிற் சிறந்த திருவள்ளுவர் குறள் வெண்பாவிற் சிறந்திடு முப் பால் பகரார் - தெய்வத் தன்மையாற் சிறந்த திருவள்ளுவரது குறள் வெண்பாக்களோடு கூடிச் சிறந்து தோன்றாநின்ற முப் பால்களையும் ஓதாரது, நாவிற்கு உயல் இல்லை - வாக்கிற்கு இன் சொற் சொல்லி வாழ்தல் உண்டாகாது; சொற்சுவை யோர் வில்லை - மனத்திற்குச் சொற்களின் சுவையை அறிதல் உண்டாகாது; மற்றும் செயல் இல்லை - இவையன்றியும் காயத்துக்கு நல்ல செய லுண்டாகாது; என்னும் திரு - என்று நினைத்துத் திருமகள் அவரிடத்துச் சேராள்.

சுவை யோர்தற்கும் செயலுக்கும் உரிய மனமும், காயமும் வருவிக்கப்பட்டன. திருமகள் சேராமை யாகிய காரியத்தைக் காரண

42