பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

83


       சிறப்புப் பாயிரம். 

பாடல்பெற்ற ஒரு சிவஸ்தலம். திருக்கேதீச்சரம்- இலங்கையி லுள்ள பாடல் பெற்ற மற்றொரு சிவஸ்தலம், தனதன்-குபேரன். கவித்தல்- சூடுதல், கர்தரம்-கழுத்து, இவ்வாசிரியப் பாவை இயற்றினோர் மகா வித்துவான் மீனாச்சி சுந்தரம் பிள்ளை மாணாக்கரும் சிதம்பரச் செட்டியார் குமாரரு மாவர். கருத்து. ஒப்புயர்வற்ற திருவள்ளுவர் திருக்குறளைப் பரிமே லழகர் உரையுடன் அச்சிற் பதிப்பிக்கும்படியாகச் செம்பிநாட்டடு மன்னர் குமாரரும், சேதுபதி யவர்களின் மானேஜருமான பொன்னுச் சாமித் தேவரவர்கள் சொல்ல, அவ்வாறு பதிப்பித்தனர் யாழ்ப்பா ணத்து நல்லூர்த் தமிழாசிரியர் ஆறுமுக நாவலர்,

     தெய்வ நாயகப் பிள்ளை. '
     {நேரிசை யாசிரியப்பா.)
திருவளர் மருமகத் தூறாவனர் பெருமா, னுந்தியத் தாமரை யந்தி லமர்ந்துயர்ந்து, புரிமுறுக் குடைந்து முருகு கொப்புளிப்ப, வள்ளித ழவிழ்க்கும் வெள்ளிதழ்க் கமலத், திருமனை யவாவு மொரு மனைக் கிழத்தியை, மன்னுற நாளுந் தன்னுறு நாவிற், செந் நிறந் திரிந்து வெண்ணிறம் பயப்ப, மருவுற வைத்த வொரு பெருந் தேவ, னருமறைப் பொருளைப் பெருநிலத் துதித்த, மன்பதை கட்கெலா மின்புற வணர்த்த, வுள்ளத் துள்ளிக் கொள்ளுந் தெய்வ, வுருவங் கரந்து திருவள் ளுவராய், மாகி லத் துற்று மேனிலத் தவரு, மவாவுற வென்று ந்தவாநல மமைத்துப், பன்மலை யுள்ளுபர் பொன்மலை யென்னப், பன்னூ லுள்ளுபர் நன்னூலாகப், புரிவுற வருளிய விரிவுறு பொருள்சேர், தெய்வத் திருக்குறள் மெய்மலி நூலைப்,

83

83