பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

89

சிறப்புப் பாயிரம். ' விட முய்யத், துன்பக லறம்பொரு ளின்பம்வீ டென்னு, நாற்பொருள் பயக்கு மேற் புடையத்' தாகத் தப்பா தருளிய முப்பான் மருவிய, திருக்குற ளென்னுந் தெய்வமா மறை யோடு, தருமர் முதலிய சால்பினர் வகுத்த, திருகில்பே ரூரைகளுட் சிறந்து நிலைஇய, வரிமே லியல்புகழ்ப் பரிமேல ழக, ருளங்கனிந் தியற்றிய வணங்கணி யுரையினைத், தேர்ச்சியின் மிக்கோர் சிந்தைநன் குவப்பக், கரலிகி தங்களான் விரவிய வழுக்களைந், துருவிய லச்சிற் றருகெனப் பஃறலைப், பன்னகஞ் சுமந்த பன்னக வரைப்பிற், குணங்குளைப் புரவி வணங்கல ரேறு வெதுப்பற வுலகம் பொதுக்கடிந் தளிக்கும், வலமுறு மிராச குலசூ டாமணி, கழைகளி புகர்முகக் கடவுணன் வேழம், விழைதரு கற்பக மென் குழை நொடித்த, வான்றேய் நறுஞ்சுவைத் தேன்றேய்த் தருந்தப், புழைக்கா நீட்டப் பழிப்பது தேனிறா

றுறுமிய சந்தனக் குழல்வாய்க் குலவுஞ், செறுபுல னுடைய முனி தன்பா, லரந்தைக்கெட நுவன்று வரம்பெறு பாக்குக், குண்டுபடு மீர்ஞ்சுனை குடைந் தரமகளி, ராக்கலர் கரம்விரித் திரப்பதை நிகர்ப்ப, வடுப் படாக் காந்தட் டுடுப்பலர் கஞலிய, முதியசெந் தமிழ்கமழ் பொதியமால் வரையான், விரவிய விண்ணவர் பரவவீ ரடியான், மூவுல களந்த மேவரு நெடுமால், வன்றிறற் பகுவாய் வன் றியி னுருக்கொளீஇ, புருவமண் புகுந்து துருவியுங் காணா, வருளார் பசுங்கொடி பொருபாற் படர்ந்த, முக்கட் கரும்பின் செக்கம லத்தாள், கரையினிற் றேய்ந்து புரைதப மணக்க, நலத்தகு கவுணியக் குலக்கொழுந் திட்ட, பழமறை கன்னகத் தளவனாய் மணக்குந், தெய்வவெண் டிரையெறி வையைமா

89

89