பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவள்ளுவர் திருக்குறள்.

யாது?( ஒன்றும் இல்லை.) அகலம். அகரம் இசை நிறைக்க வந்த அளபெடை.'கொல்' அசை. 'தான்' சாதி ஒருமைப்பெயர், என்னின் என்பது செய்யும் என்னும் விகாரத்தால் னகர வொற்றுக் கெட்டு நின்றது. எவன் என்னும் வினாக் குறிப்பு வினைமுற்று என் என்று நின்றது. கருத்து. கல்வியின் பயன் கடவுளைத் தொழுதல். 2. ௩. மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார். பொருள். மலர்மிசை ஏகினான் மாண் அடி சேர்ந்தார் -- பூமேல் சென்றவனது மாட்சிமைப்பட்ட அடிகளைச் சேர்ந்தவர், நிலமிசை நீடு வாழ்வார்-- நிலவுகின்கண் நெடுங்காலம் வாழ்வர். அகலம். அடி என்பது சாதி ஒருமைப்பெயர். ' பூமிசை நடந்தான்' என்பது ஒரு மதக் கடவுளின் பெயர், மனம் என்பதற்கு உள்ளக் கமலம் என்று உரைப்பாரும் உளர். அவ்வாறு உரைப்பது வலிந்து பொருள் கோட லாகும். கருத்து. கடவுளை உணர்ந்தோர் நில வுலகில் நெடுங் காலம் வாழ்வர். ஈ. வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க் கியாண்டு மிடும்பை யில. பொருள். வேண்டுதல் வேண்டாமை இல்லான் அடி சேர்ந் தார்க்கு - விருப்பு வெறுப்பு இல்லாதானுடைய அடிகளைச் சேர்ந்தவர்க்கு, யாண்டும் இடும்பை இல--எவ்விடத்தும் துன்பங்கள் இல.

அகலம். அடி, இடும்பை என்பன சாதி ஒருமைப் பெயர்கள். இல்லான் என்பது செய்யுள் விகாரத்தால், லகர வொற்றுக் கெட்டு

102