பக்கம்:பிள்ளைக்கலி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24


அவனுடைய மாடுகளே அழைப்பதற்கு அந்த அபூர்வ காணமே போதுமாயிருந்தது. (இதை உத்தேசிக்கும் போதுதான், பழைய பிருந்தாவன கிருஷ்ணனுடைய வேணுகான மகிமையிலும் எனக்குக் கொஞ்சம் சந்தேகம் உண்டாகிறது.) இராஜன் வாய்க்காலேக் கடந்து அப்பாலுள்ள காட்டில் புகுந்தான். காடு என்றதும் வானமளாவிய விருகrங்களையும், புலிகளையும், கரடிகளையும் எண்ணிக் கொள்ள வேண்டாம். நான் சொல்லும் கொள்ளிடக்கரைக் காட்டில் மூன்று ஆள் உயரத் துக்கு மேற்பட்ட மரம் ஒன்றுகூடக் கிடையாது. ஆனாலும் காடு காடுதான். முட்புதர்களும், மற்றச் செடிகொடிகளும் அடர்ந்து மனிதர் பிரவேசிப்பது அசாத்தியமாயிருக்கும். அபூர்வமாய் அங்குமிங்குமுள்ள ஒற்றையடிப் பாதை வழியாய் ஒருவன் உள் புகுந்துவிட்டால் அவனைத் தேடிக் கண்டுபிடிப்பது பிரம்மப் பிரயத் தனம்தான். பாம்புகள், கீரிகள், நரிகள் ஆகியவைதான் இந்தக் காட்டில் உள்ள துஷ்டப் பிராணிகள். இப்படிப்பட்ட காட்டில் கிருஷ்ணன் காலை நேரமெல்லாம் சுற்றி அலைந்தான். மத்தியான்னம் வரையில் தேடியும் பய னில்லை. கடைசியாக மாடு போனதுதான் என்று தீர்மானித்துக் கொண்டு வீட்டுக்குத் திரும்பினன். தண்ணிர் குடிப்பதற்காகக் கொள்ளிடத்தின் கரையோர மடுவில் இறங்கி, முதலைக்கு இரை யானுலும் ஆகியிருக்கலாம். அவனுடைய நெஞ்சில் பாருங்கல்லே வைத்தது போல் பாரமாயிருந்தது. இவ்வளவும் பூங்கொடியினல் ஏற்பட்டது என்பதை நினைக்க அவனுக்கு அவள் மேல் கோபம் வந்தது. எதற்காக அவளைப் பற்றித் தான் நினைக்க வேண்டும் ? இவ்வளவுக்கும் அவள் தன்னைப் பற்றி நினைப்பதாகவே தெரியவில்லை. என்னதான் வீட்டிலே வேலையென்ருலும், மனத்திலே மட்டும் பிரியம் இருந் தால் இப்படி இருப்பாளா? அவள் வீட்டுப்பக்கம் தான் போகும் போதுகூட வெளியில் வந்து தலைகாட்டுவதில்லை. சே! அப்படிப் பட்டவளிடம் தான் ஏன் மனத்தைச் செலுத்த வேண்டும்? அருமையான மயிலைக் காளை நஷ்டமானதுதான் லாபம் (ஒய்! கிருஷ்ணக் கோளுரே! உம்முடைய மூளைக் குழப்பத்தில் எதை வேண்டுமானலும் சொல்வீர் போலிருக்கிறது! நஷ்டம் எப்படி ஐயா லாபம் ஆகும்?) இருக்கட்டும்; ஆயாளையாவது திருப்தி செய்யலாம். நல்ல பணக்கார வீட்டுப் பெண்ணுகப் பார்த்துக் கட்டிக் கொள்ளலாம். இந்த அநாதைப் பெண் யாருக்கு வேண்டும்? இவளை நினைக் காமல் விட்டுவிட வேண்டியதுதான். தள்ளு.....!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளைக்கலி.pdf/22&oldid=1395638" இலிருந்து மீள்விக்கப்பட்டது