பக்கம்:பிள்ளைக்கலி.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109


கள். அந்நாட்டை நாகரிகம் பெறச்செய்து வாழவைக்கும் கலையின் காவலராயிற்றே குப்பமுத்தாசாரி! "ஆசாரியவர்களே! காளை யார் கோயிலின் கோபுரத்தை கட்டிமுடித்த மருதுவின் புகழ், ஒரு புகழல்ல! இதோ! மருத மரத்தால் காளீசுவரருக்குப் பெரிய ரதம் உருவாக்கப்போகும் தங்களுடைய புகழைத்தான் பெரும்புகழ் என்பேன்! ஏனென்ருல், என்னுடைய ஆயுள் மிகச்சொற்பம்! தாங்கள் படைக்கும் கலையின் ஆயுள் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் நிலைத்திருக்கும். எனவே, பறைசாற்றியபடி பல சிற்பிகள் வந்திருக்கின்றனர்; மருத மரங்களும் ஏராளமாகக் குவிந்து விட்டன. இனி, தாங்கள் தலைமை தாங்கி உருவாக்க வேண்டியதுதான். என் வேண்டு கோளை மறுக்காமல் ஒப்புக்கொண்டதற்கு மகிழ்ச்சி!’ 'நன்றி மன்னவா! ஆனால்...' என்று தயங்கினர் குப்ப முத்தாசாரி. சின்னமருது முன்வந்து நெற்றியைச் சுளித்தார். 'சொல் லுங்கள் சிற்பியாரே' 'வெள்ளையர்களால் அழியப்போகும் இக்கலை உருவாக வேண்டுமா என்பதுதான் என்னுடைய தாழ்மையான முதல் கேள்வி: ' 'வெள்ளையர்களைத்தான் நாம் பூண்டோடு அழிக்கப் போகி ருேமே!’ 'கட்டபொம்ம வீரக்காளையின் கதியைக் கேள்விப்பட்ட பிறகு, நாம் வெள்ளையரை அழிப்போம் என்பது கனவாகி, விட்டதே அரசே! அடியேனின் கருத்து புறம்பாலுைம் மன்னிக் கவும்!” - மருது பாண்டியர்களுக்கு என்ன மறுமொழி கூறுவதென்றே புரியவில்லை. மயக்கம் கொண்டனர். என்ருலும், மனத்தைத் திடப்படுத்திக்கொண்டு குப்பமுத்தாசாரியை நோக்கிஞர் பெரிய மருது: "சிற்பியாரே!. நாம் அழிந்தாலும் நம்முடைய கலையை அழிக்காமல் பாதுகாத்துவிட்டுச் செல்வோம்! துணிவாகச்செயலில் இறங்குங்கள்! இந்தப் பெரிய மருதுவின் உயிரையே வெள்ளையன், . தாங்கள் படைக்கும் ரதத்துக்குக் காணிக்கையாகக் கேட்டாலும் தருவதற்குத் தயாராக இருக்கிறேன்: 'போதும் அரசே போதும்! நாளேயே நாள் பார்த்து ரத வேலையைத் தொடங்குகிறேன்!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளைக்கலி.pdf/107&oldid=1395726" இலிருந்து மீள்விக்கப்பட்டது