பக்கம்:பிள்ளைக்கலி.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 36 ஒழுங்காகக் கல்லூரிக்கு வராதவன். ஆனல் கல்லூரியை விட்ட பிறகு இங்கு வரும்போதெல்லாம் என்னைத் தவருது கண்டு போவான். பெங்களூரில் எங்கேயோ பெரிய பதவியில் இருக் கிருன். ஆண்டாண்டும் யார் வாழ்த்து அனுப்பத் தவறிலுைம் அவன் மட்டும் தவறமாட்டான். அடுத்தது கண்ணகி அனுப்பியிருந்தாள். அது என் மனைவிக்கு என்பது எனக்குத் தெரியும். கண்ணகி இப்போது தன் கணவ ைேடு ஐதராபாத்தில் இருக்கிருள். அவள் இங்கு விடுதியில் தங்கிப் படித்தபோது என் மனைவியை வந்து கண்டு போவாள். அந்த நினைவு மறவாமல் சில ஆண்டுகளாக அவளும் வாழ்த்து அனுப்பி வருகிருள். இப்படிப் பல வாழ்த்துகளைப் புரட்டினேன். என் வாழ்வு நினைவுகளையும் புரட்டிக் கொண்டிருந்தேன். என்ன படிக்கி நீங்க. சாமி கும்பிட வாங்க' என்ற என் மனைவியின் அழைப் பொலி கேட்டது. அப்பா அப்பா, சாமி கும்புட வா. பொங்கல் ஆச்சி. சாப்புட வா. அம்மா கூப்புடுது’’-என்று சொல்லிக் கொண்டே என் சிறிய பையன் வந்தான். பார்த்த வாழ்த்துகளே ஒரு புறமும், பார்க்க வேண்டிய வாழ்த்துகளே மற்ருெரு புறமும் ஒழுங்காக அடுக்கி வைத்துவிட்டுப் படையல் இட்டிருந்த முற்றத் திற்கு வந்தேன். என் மனைவி ஆண்டாள் எல்லாம் தயாராக வைத்து விட்டு, "தேங்காய் உடைத்துக் கொண்டு வாங்க, சூடம் காட்டுங்க” என்று எனக்குக் கட்டளை இட்டாள். 'அக்கா கும்பிடரு பாரு. நீயும் விழுந்து சூரியனைக் கும்பிடுடா கண்ணப்பா' என்ருள். கண்ணப்பனும் அக்காவைப் பார்த்துக் கண்ணை மூடிக்கொண்டு பெண்கள் கும்பிடுவதுபோல முழங்காலை மடக்கிக் கொண்டு விழுந்து கும்பிட்டான். நான் சிரித்துக் கொண்டே என் மனைவி இட்ட கட்டளைகளை முடித்துவிட்டு, இட்டிருந்த இலையில் போய் உட்கார்ந்தேன். சாப்பிட்டுக் கொண்டே, 'ஆண்டாள்! கண்ணகி உனக்கு வாழ்த்து அனுப்பியிருக்கு' என்றேன். "அவ நல்ல பொண்ணு! எனக்குப் போன வருசம்கூட அனுப்பின. அவளுக்கு முன்னே படிச்சாளே, சுதா சுதாம்பிங் களே, கெட்டிக்காரப் பொண்ணு'ன்னு பாராட்டுவிங்களே; அவ நம்மை மறந்தே போயிட்டா பார்த்திங்களா. அப்போ அடிக்கடி வந்து 'மாமி! அது வேணும், இது வேணும்’னு சொந்த வீடு மாதிரி இங்கே வந்து பழகுவா' என்று வாழ்த்து அனுப்பாதவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளைக்கலி.pdf/134&oldid=1395753" இலிருந்து மீள்விக்கப்பட்டது