அட்டவணை பேச்சு:கலைக்களஞ்சியம் 1.pdf

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமூலம் இலிருந்து

விடுபட்ட பக்கங்கள்[தொகு]

தற்போதுள்ள pdf புத்தகத்தில் 476,477 பக்கங்கள் இல்லை ( pages missing )--TVA ARUN (பேச்சு) 10:28, 13 ஏப்ரல் 2022 (UTC)

தற்போதுள்ள pdf புத்தகத்தில் 230 பக்கம் இல்லை. மிகவும் அவசியமான இந்த நூலின் விடுபட்ட பக்கங்களை நிர்வாகிகள் சேர்த்துவிடவும்--அருளரசன் (பேச்சு) 14:22, 16 ஏப்ரல் 2022 (UTC)

இணையத்தில் இருக்கும் தெளிவான களஞ்சியப் பக்கங்களை எடுத்தல்
சுட்டியமைக்கு நன்றி. இணையத்தில் சீர்மையான பக்கங்கள்த.இ.க.க. நூலகத்தில் கிடைக்கின்றன. பொதுவாக அனைத்துத் தொகுதிகளையும் இரு தொகுதிகளாகப் பிரிக்கலாம். கட்டுரைகள் பகுதி, கட்டுரைகளுக்கு முன் உள்ள முன்னுரை, பதிப்புரை போன்றவை. இந்த வகையில் இந்த முதல் தொகுதியில் 762 பக்கங்கள் கட்டுரைகளாகும். அதற்கு முன்னுள்ள 35 பக்கங்கள் முன்னுரை,பதிப்புரை முதலிய வழமையான பக்கங்கள் ஆகும். பயன்படுத்த இருக்கும் நுட்பங்கள் 1. wget, 2. python+Beautifulsoup விரைவில் ஆவணப்படுத்துகிறேன்.--தகவலுழவன் (பேச்சு). 03:17, 17 ஏப்ரல் 2022 (UTC)

மேலுமுள்ள விடுபட்ட பக்கங்கள்: பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/610 என்பதன் அச்செண் 562 ஆகும். இதனை அடுத்த அச்செண்ணான 563 இல்லை.--தகவலுழவன் (பேச்சு). 03:56, 23 ஏப்ரல் 2022 (UTC)

அனைத்துப்பக்கங்களும் சரிபார்க்கப்பட்டன.

தீர்வு --தகவலுழவன் (பேச்சு). 04:25, 23 ஏப்ரல் 2022 (UTC)

சீரமைப்பு[தொகு]

தற்போதுள்ள நூலின் பக்கங்கள் சீரமைக்க வேண்டியதுள்ளது போல, தமிழ் இணையக்கல்விக் கழக நூலத்தில் இருக்கும் கலைக்களஞ்சியத்திலும் சீரமைக்க வேண்டிய பக்கங்கள் உள்ளன.இரண்டினையும் இணைத்து விக்கிமூலத்திற்கு ஏற்ற வகையில் புது மின்னூலை உருவாக்க வேண்டும். அதாவது ஓரே மாதிரி அளவுள்ள ஓரங்கள் இருப்பின் நாம் தெளிவாகச் சொற்களை வாசிக்க இயலும். ஓரங்கள் என்பது யாதெனில் ஒரு பக்கத்தில் அச்சாகியுள்ள சொற்களுக்கு வெளியே இருக்கும் வெள்ளை நிற அச்சிடாப் பகுதி சில பக்கங்களில் மிகஅதிகமாவும், மிக குறைவாகவும் இருக்கின்றன. தற்போது அப்பணி நடைபெற்று முடியும் நிலையிலுல் உள்ளது.--தகவலுழவன் (பேச்சு). 03:58, 21 ஏப்ரல் 2022 (UTC)

  • [1];[2];[3]- இவ்வகை பக்கங்களின் பகுதிகளை தேவைக்கேற்ப அட்டவணைகளாக (படம் வடிவில்) பயன்படுத்தலாமா? --TVA ARUN (பேச்சு)
  • அனைத்துப் பயனர்களும் எளிமையாக செய்ய பட வடிவம் உதவும். ஆனால் அவற்றை மஞ்சள் நிறமாக மாற்ற வேண்டாம். பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/149 என்ற அட்டவணைப்போல உருவாக்க வேண்டும். இவற்றை நன்கு தெரிந்தவர்களே செய்ய இயலும். புதியவர்களை இவற்றை செய்ய வற்புறுத்தினால் அவர்கள் இத்தளம் வருவதைத் தவிர்ப்பர். அவர்கள் கேட்டால் நாம் பயிற்சி தர திட்டமிட வேண்டும்.--தகவலுழவன் (பேச்சு). 02:03, 1 ஆகத்து 2022 (UTC)[பதிலளி]

நூற்கட்டு எண்[தொகு]

  • 8 பக்கங்களுக்கு ஒருமுறை நூற்கட்டுஎண் அதிகமாகிறது. இது இணையத்தில் தெளிவாகக் கிடைக்கும் படக்களஞ்சியப் பக்கங்களில் இல்லை. முடிந்தவரை அவற்றை எழுதலாமா? அல்லது விட்டுவிடலாமா? --தகவலுழவன் (பேச்சு). 07:46, 21 ஏப்ரல் 2022 (UTC)
  • வழமையாக இந்நூலில் முழுபக்கத்தில் ஒரு படம் இருந்தால் வரிசை எண் தரமாட்டார்கள். ஆனால், இந்நூலின் அச்செண் 343 என்ற பக்கத்திற்கு அடுத்து வரும் முழுபடத்திற்கு அச்சுப்பக்க எண் 344 என உள்ளது. ஆனால், நூலில் குறிப்பிடப்படவில்லை. இதற்கு அடுத்துள்ள அச்சுப்பக்க எண்ணை வைத்தே அறியலாம். இப்படங்கள் சென்னை பிரித்தானிய நூலகத்தில் இருந்து பெறப்பட்டமையால், நாம் பெற முயலவேண்டும்.--தகவலுழவன் (பேச்சு). 03:14, 22 ஏப்ரல் 2022 (UTC)

தொடர்புடையப் பொதுவகப் படங்கள்[தொகு]

  • பக்கம் 494, 495, 499 அட்டவணையின் பக்கவாட்டுத்தோற்றம் மாற்றப்பட்டன. மேலும் பக்க எண்கள் அச்சிடப்படவில்லை.--தகவலுழவன் (பேச்சு). 04:28, 23 ஏப்ரல் 2022 (UTC)

தீர்வு ஒரு பக்கம் முழுவதும் படம் இருப்பின் ஓரிரு படங்களைத் தவிர பக்க எண்கள் தரப்படவில்லை. ஆனால், சில பக்கங்களில் (அச்செண்கள் ; 283, 344, 446, 447, 449, -704 ) கொடுத்துள்ளனர். மேலும், தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் இணைய வடிவ கலைக்களஞ்சிய பக்கங்களில், எந்த ஒரு முழு படப்பக்கமும் இணைக்கப்படவில்லை என்பதில் கவனித்தில் கொண்டு, கலைக்களஞ்சிய நூலின் அச்சுப்படியில் உள்ள முழுப்பக்கங்கள் மின்வருடப்பட்டு கிடைக்கின்றன. இதற்குரிய இணைப்புகளை, பொதுவகத்தில் தற்போதுள்ள pdf கோப்பில் இணைத்துள்ளேன். --தகவலுழவன் (பேச்சு). 04:39, 23 ஏப்ரல் 2022 (UTC)

காட்சியகம்[தொகு]

பதிவேற்ற ஒப்பீடு[தொகு]

@TVA ARUN, Arularasan. G: பலவித மேம்பாடுகளைச் செய்து 808 பக்கங்கள் கொண்ட இதன் புதிய பதிப்பை உருவாக்கியுள்ளேன். இருவர் இணைந்து ஒப்பீடு செய்த பின் பதிவேற்றினால் சிறப்பாக இருக்கும்.இணைய வேகம் சரியாக இருக்கும் நேரத்தில்அழைக்கவும். காலை 4 மணி முதல் மாலை 4 வரை உங்களுக்கு உகந்த நேரத்தில் அழைக்கவும். 30-60 நிமிடங்கள் தேவைப்படும். பிறகு பதிவேற்றம் செய்கிறேன்.--தகவலுழவன் (பேச்சு). 13:46, 22 ஏப்ரல் 2022 (UTC)

தீர்வு பதிவேற்றுவதற்கு முன், பக்கங்களைச் சரிபார்க்க உதவிய அருளரசனுக்கும், பள்ளி மாணவி ஜசினியாவுக்கும் (200 பக்கங்கள்) இருவருக்கும் நன்றி. --தகவலுழவன் (பேச்சு). 04:42, 23 ஏப்ரல் 2022 (UTC)

இதற்குரிய எழுத்துணரியாக்கம் செய்வது எப்படி?[தொகு]

எழுத்துணிரியாக்கங்களை விவரிக்கிறது,

நமக்குள்ள எழுத்துணிரி கருவிகளில் எதைஎதை எப்பொழுது பயன்படுத்த வேண்டும் என்பதற்கான பயிற்சிகளை உங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்த 16 நிமிடப்பதிவு பிற நூல்களுக்கும் பயனாகும். கண்டு கருத்திடவும்.--தகவலுழவன் (பேச்சு). 02:21, 28 ஏப்ரல் 2022 (UTC)

பங்களிப்பாளர்கள் கவனித்திற்கு[தொகு]

கீழ்கண்ட பக்கங்களைக் கவனித்தில் கொண்டு, பங்களிப்புச் செய்ய வேண்டுகிறேன்.

தெளிவற்ற பக்கங்களை பிரதியீடு செய்வது தொடர்பாக[தொகு]

இந்த அட்டவனையில் சில பக்கங்கள் நல்லமுறையில் மெய்ப்பு பார்க்க இயலாதவாறு மோசமாக உள்ளன. அதற்கு மாற்றாக இதற்கு முன் பதிவேற்றிய ஒரு அட்டவனையில் உள்ள 100 பக்களில் இருந்து சில பக்கங்களை பிரதியீடு செய்ய பரிந்துரைக்கிறேன். 76, 89, 92, 108, 110, 112, 113, 116, 124, 129, 132 மாற்றாக முறையே அட்டவணை:கலைக் களஞ்சியம் அ-அம்மானை.pdf இல் இருந்து பக்கம் 41, 54, 57, 73, 75, 77, 78, 81, 89, 94, 97 ஆகியவற்றை பிரதியீடு செய்யலாம்.--அருளரசன் (பேச்சு) 05:06, 5 மே 2022 (UTC)[பதிலளி]

சுட்டியமைக்கு நன்றி. முழுமையாக நூலினைக் கண்டு நீங்கள் குறிப்பிட்ட பக்கங்களையும், பிற பக்கங்களையும் மேம்படுத்துகிறேன். தகவலுழவன் (பேச்சு). 02:31, 19 மே 2022 (UTC)[பதிலளி]

நேரடி ஒப்பீடு[தொகு]

காகித வடிவில் இருக்கும் இத்தொகுதியோடு, இம்மின்னூலின் அனைத்து பக்கங்களும், நேரடியாக ஒப்பீடு செய்யப்பட்டன. இம்மின்னூலில் பக்கங்கள் சரியாக உள்ளன. ஆனால், நான் பார்த்த நூலில் படங்கள் மிகத்தெளிவாக இருந்தன. ஆனால் பழைய நூல் என்பதால், அந்நூலின் பக்கங்களை கவனமாக கையாளப்பட்டன. இதுபோன்று ஒவ்வொரு நூலின் படங்களை நேரடியாக படமி(camera) வழியே எடுத்தால் சிறப்பாக இருக்குமென்றே எண்ணுகிறேன்.கருப்பு வெள்ளை படங்கள் மின்வருடல் செய்யும் பொழுது, சரியாக வருவதில்லை. பிற வேலைகள் மட்டுப்படும் என்பதால் ஒத்தி வைத்துள்ளேன். தகவலுழவன் (பேச்சு). 01:47, 6 சூலை 2022 (UTC)[பதிலளி]

மெய்ப்புநிலைப் புள்ளிவிவரங்கள்[தொகு]

த இ க கழக இணைய நூலகத்தில், இந்த நூலின் தெளிவற்ற பக்கங்களை தெளிவாக காணலாம்[தொகு]

தலைப்புகளுக்கான குறியீடுகளில் சீர்மை வேண்டும்[தொகு]

கலைக்களஞ்சியம் என்பது கட்டுரைகளின் தொகுப்பு என்பதை நாம் அறிவோம். பல கட்டுரைகள் உட்தலைப்புகளைக் கொண்டுள்ளன. எனவே, கட்டுரைகளுக்கு x-larger என்பதையும், உட்தலைப்புகளுக்கு larger என்பதையும், பிறகு இரண்டையும் தடிமனாக்கம் செய்யவதற்கான <.b> குறியீடுகளையும் இடுதல் விரைந்து முடிக்க உதவும் நுட்பப் பணிகளுக்கு கை கொடுக்கும். தற்போது சீர்மையற்று குறியீடுகள் உள்ளன. அவற்றை இந்நூல் முழுவதும் மாற்றலாமா? @Arularasan. G: நீங்கள் இதுவரை செய்த பக்க ஒருங்கிணைவு (transclution) செய்த பக்கங்களில் இவை எப்படி உள்ளன? நான் மேற்கூறியபடி குறியீடுகளை இடலாமா? தகவலுழவன் (பேச்சு). 03:35, 1 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]

தாங்கள் குறிப்பிடுவது சரியே. இதில் தற்போது சீர்மையற்று குறியீடுகளே உள்ளன. நுப்பத்தின் அடிப்படையில் இவற்றை மாற்ற முடியுமானால் செய்வது நல்லது.--அருளரசன் (பேச்சு) 02:01, 2 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]
குறியீடுகள் சரியாக இருத்தால் மட்டுமே பைத்தான் நுட்பத்தின் வழி பக்க ஒருங்கிணைவு (transclusion) தானியக்கம் இயலும். பல கலைக்களஞ்சியங்கள் இருப்பதால் இத்தொகுதியின் இ முதல் நான் செய்து பார்த்து முயற்சிக்கிறேன். இம்முயற்சி வெற்றி பெறும். உடல்நிலை காரணங்களால் அவ்வப்போதே முயற்சிப்பேன். இம்மாத இறுதியில் நல்லதொரு செய்தி சொல்கிறேன். அது பின்வரும் கலைக்களஞ்சியங்களுக்கு உதவும். எனினும், இது போன்ற நூலில் நாம் நுட்ப அளவில் பிரஞ்சு விக்கிமூலத்தோடு ஒப்பிடும் போது நாம் மிகவும் பின்தங்கியே உள்ளோம். முதலில் இதனை முடித்து பிறகு அது பற்றி கற்றுத் தெரிவிக்கிறேன். தகவலுழவன் (பேச்சு). 04:55, 3 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]
வணக்கம் தகவலுழவன் {{கக}} என்னும் வார்ப்புரு பக்கத்தில் உள்ள வசதிகளைப் பயன்படுத்தி கலைக்களஞ்சிய பக்க ஒருங்கிணைப்பை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி--அருளரசன் (பேச்சு) 10:33, 3 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]
பல வகை இணைப்பு முறைகளை பிற விக்கித்திட்டங்களுக்கு தர, இந்த ஒரே வார்ப்புரு பயன்படும் என்பதை விளக்கியமைக்கு நன்றி. அதனையும் செய்வேன். தகவலுழவன் (பேச்சு). 10:39, 3 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]

பக்கங்களை பச்சையாக்குவதை குறிப்பிட்ட காலம் வரை தவிர்ப்போமா?[தொகு]

பக்க ஒருங்கிணைவுகளை செய்ய மஞ்சள் நிலையே போதும். பச்சையாக்குதல் கட்டாயமன்று என பாலாஜியுடன் சில வருடங்களுக்கு முன் உரையாடியதாக நினைவு. அப்பொழுது மலையாள விக்கிமூலத்தில் நடைமுறையில் புழக்கம் இல்லாத எழுத்துருக்களை கூட அவர்கள் உருவாக்குவதாகச் சொன்னார். நான் b:இங்சுகேப்பு (inkscap) கற்ற போது, ஏதோ ஒரு ஒருங்குறி எழுத்துரு முறையில் முந்தைய எழுத்துருக்களைக் கண்டேன். அதனை இங்கும் கொணர முயற்சி எடுக்க வேண்டும். அதனால் இரு எழுத்துக்களில் வரும் உயிர்மெய் எழுத்துக்கள் ஒரே எழுத்தாக வரும். எடுத்துக்காட்டு 'கலை' என்பது இந்நூலின் முதற்பக்க அட்டையில் இருப்பது போல, ஒரே எழுத்தாக வரும். அதுவரை பக்கங்களை பச்சையாக்குவதை குறிப்பிட்ட காலம் வரை தவிர்ப்போ. நிறைய பக்கங்களை மஞ்சளாக்குவதால் நாம் இன்னும் இந்திய அளவிலும் சிறப்பாக திகழ முடியும் என நம்புகிறேன். உங்களின் எண்ணங்களின் அறியத் தருக. தகவலுழவன் (பேச்சு). 07:04, 4 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]

பத்தி சீராக்கம் குறித்த ஐயம்[தொகு]

பல பக்கங்களை காணும் பொழுது மெய்ப்பு கண்டவர் அலைப்பேசியில் செய்திருப்பதாகத் தெரிகிறது அதனால் வாக்கியங்கள் சரியாக மடங்கி மடங்கி பாடல் வரிகள் போன்று வருகிறது. ஆனால் அவை பக்க ஒருங்கிணைவு செய்யும் போது சரியாகத் தோன்றுகிறது. எனது வினா யாதெனில் அவற்றை அப்படியே விட்டுவிடலாமா அல்லது பத்தியின் வாக்கியங்களை சீராக்கம் செய்ய வேண்டுமா? தகவலுழவன் (பேச்சு). 07:08, 4 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]

இறுதி விளைவில் பெரிய பாதிப்பு வரவில்லை என்றாலும், என் மனம் ஒப்பவில்லை. எனவே, பைத்தான் நுட்பவழியாக, மேற்கூறிய அலைப்பேசியால் தோன்றிய வரிகளை சீராக மடக்கி, அச்சுப்பக்கத்தில் வருவது போல, பத்திகளாக, அமையுமாறு செய்துள்ளேன். பத்தி சீராக்கத்தினைக் காண்க தொடர்ந்து மேம்படுத்தித் தருகிறேன். பின்னூட்டம் இருப்பின் தருக. தகவலுழவன் (பேச்சு). 14:53, 9 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]

ஒருங்கிணைவு செய்த பக்கங்களிடையே இணைப்பு[தொகு]

பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/572 என்ற பக்கத்தில் இசை கட்டுரைகள் என்ற உட்தலைப்பு உள்ளது. அதன் சொற்களுக்கு ஏற்கனவே ஒருங்கிணைவு செய்த பக்கங்களை இணைத்துள்ளேன். இது சரியா அல்லது வேறு மாதிரி செய்ய வேண்டுமா? அது மாதிரி செய்தால், கலைக்களஞ்சியம்/இசை-கட்டுரைகள் என்ற துணைப்பக்கத்தினை காணும் ஒருவர் எளிதில் தாவிச்சென்று படிக்க இயலும் என்றே கருதுகிறேன். உங்களின் எண்ணங்களைத் தெரியப்படுத்துங்கள் தகவலுழவன் (பேச்சு). 07:26, 4 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]

துணைப்பக்கங்களை உருவாக்குதலில் சீர்மை[தொகு]

வணக்கம் உழவன், இசை என்ற கட்டுரையின் துணைத்தலைப்புகளான இசைக்குறியிடல் முதல் பிறநாட்டு இசையும் இந்திய இசையும் ஈராக உள்ள துணைக் கட்டுரைகள் இசை என்ற கட்டுரையிலேயே உள்ளடங்கியதாக இருக்கவேண்டும். கருநாடக சங்கீதம், பிற நாடுகளில் இசை, பிறநாட்டு இசையும் இந்திய இசையும் போன்ற துணைத்தலைப்பிலான கட்டுரைகளை தனிக்கட்டுரைகளாக 'இ' வரிசையில் வைக்கும்போது கலைக்களஞ்சியத்தின் அடிப்படை பாங்கான அகரவரிசையிலான கட்டுரைத் தொடரில் சீர்மை அற்றதாக இருக்கும்.--அருளரசன் (பேச்சு) 11:38, 4 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]

தனித்தனியே அவற்றிற்கான கட்டுரைகள் விக்கிப்பீடியாவில் உள்ளமையால் எடுத்துக்காட்டாக கருநாடக சங்கீதம். மேலும் பல ஆங்கில கட்டுரைகளில் தனிப்பக்கங்களாக உள்ளன எடுத்துக்காட்டு w:en:Musical notation நீங்கள் கூறுவது போல கட்டுரைத்தொகுப்புகள் அகரவரிசையில் காணும் போது சிதறிவிடும் என்பதும் உண்மையே. பிற விக்கித்திட்டங்களுக்கும் இணைப்பு தருதல் அவசியமே. ஒரே தலைப்பாக இருந்தால் இணைப்பு தருவது இயலுமா? துணைக்கட்டுகளுக்கு அகர வரிசை பெற முன்னொட்டாக இசை என்பதை இணைக்கலாமா? பிறரின் எண்ணங்களையும் பெற முற்படுகிறேன். தகவலுழவன் (பேச்சு). 02:58, 5 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]
கலைக்களஞ்சியம்/இசைத்தமிழ் என்பதில் இசைத்தமிழ் ஆராய்ச்சி என்பதையும் உள்ளடக்கி, ஒரே கட்டுரையாக உருவாக்கியுள்ளேன். சரிதானே?--தகவலுழவன் (பேச்சு). 03:44, 5 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]
கலைக்களஞ்சியதில் எத்தனை துணைத் தலைப்புகள் இருந்தாலும் அப்பக்கத்தின் மேலடியில் உள்ள தலைப்பையே முதன்மை தலைப்பாக கொள்ளவேண்டும் எனபது என் கருத்து. நீங்கள் குறிப்பிட்ட கருநாடக சங்கீதம் போன்ற கட்டுரைகளுக்கு அகர வரிசைப்படி அடுத்தடுத்த கலைக்களஞ்சிய பாகங்களில் தனிக் கட்டுரைகள் உள்ளன கருநாடக சங்கீதம் குறித்த தனிக் கட்டுரை கலைக்களஞ்சியம் பாகம் 3 இல் உள்ளது. ஒரே தலைப்புள்ள கட்டுரையில் இரண்டு விக்கீப்பீடியா கட்டுரைகள்வரை இணைப்பு தர வசதி உள்ளது.--அருளரசன் (பேச்சு) 07:36, 5 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]
இரண்டுக்கும் மேற்ப்பட்ட விக்கிப்பீடியா கட்டுரைகளையும் இணைக்க முடியும். கலைகளஞ்சியத்திலுள்ள கட்டுரைத் தலைப்பை வைத்தல் நன்று.-- Balajijagadesh (பேச்சு) 10:27, 7 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]
other projects என்பதனைப் பயன்படுத்தி, அதுபோல இரண்டிற்க்கும் மேற்பட்ட கட்டுரைகளுக்கு இணைப்பு கொடுத்துள்ளேன். காண்க:கலைக்களஞ்சியம்/இசை மேலும் பொதுவாக அனைத்துக்கும் |wikipedia என்பதையும் இட்டு வருகிறேன். ஏனெனில், அனைத்துக்கும் இட்டால், புதியவர் தொகுத்தல் செய்தாலும் கட்டுரை இருப்பது போன்ற பிழை ஏற்படாது. எனவே, அனைத்திலும் |wikipedia என்பதை இட எண்ணுகிறேன். நம்மில் யாரேனும் விக்கி்ப்பீடியாவில் கட்டுரையைக் கண்டால் இட வசதியாக இருக்கும். தகவலுழவன் (பேச்சு). 03:34, 8 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]

துணைப்பக்கங்கள் உருவாக்கல் வார்ப்புருவில் பக்க எல்லை என்ன?[தொகு]

பகுப்பு:பக்கங்களில் வார்ப்புரு சேர்ப்பதற்கானஅளவு வரம்பை மீறிவிட்டது. என்ற பகுப்பு தானியக்கமாக வருகிறது. இதற்கு முன் வேறொரு நூலில் தோன்றியுள்ளது. இது போல வழு வரும் பக்கங்கள் என்னென்ன என்று நாம் உணர்ந்து அதற்கொப்ப செயற்படுதல் நன்று. இல்லையெனில் பதிவிறக்கம் செய்யும் பொழுது சில பக்கங்கள் இல்லாமல் போகும். இதுவரை அந்நூலினை பதிவிறக்கம் செய்தவர் எவரும் எத்தகைய குறைபாடு செய்தியையும் சொல்லவில்லை. எனவே பதிவிறக்கம் செய்தவரிடம் பின்னூட்டம் பெறுதல் நன்று. இந்த வார்ப்புருவை பொறுத்தவரை பக்க எல்லை என்ன? எத்தனை பக்கங்களுக்கு இணைப்பு தரவேண்டும். கலைக்களஞ்சியம்/இந்தியா என்ற கட்டுரையை, எவ்வாறு பிரிக்கலாம். அதன் அடிப்புறத்தில் வழுவினைக் காண்க. தகவலுழவன் (பேச்சு). 07:36, 10 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]

வார்ப்புரு பேச்சு:கக இங்கும் குறிப்பிட்டுள்ளேன். --தகவலுழவன் (பேச்சு). 01:23, 13 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]
@Balajijagadesh கலைக்களஞ்சியம்/இந்தியா என்ற கட்டுரையில் ஏற்பட்டுள்ள வழுவுக்கு தீர்வு ஏதாவது உள்ளதா. அல்லது உழவன் கேட்டுள்ளபடி இக்கட்டுரையை இரண்டாக பிரித்துவிடுவதா தங்கள் கருத்து தேவை--அருளரசன் (பேச்சு) 12:40, 13 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]