பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6 / அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு


தீயர்களுக்கு தீங்கின் பிற்பலனுதிக்குங்கால், ஏழை குடிகளுக்கு நற்பலன் தோற்று மென்பது கன்மச் சக்கர வியல்பாம்.

- 1:23; நவம்பர் 20, 1907 –

9. விழுப்புர மதப்போர்

விழுப்புரத்தில் சென்றவாரம் நடந்த கலகத்தில் இறந்தவர்களுக்குப் பரிதவிக்குங் குடும்பத்தாரும், காயமடைந்தவர்களுக்காகக் கவலையுருங் காருண்ணியருங் கலங்கி நிற்க மற்றத் தமிழ்ப்பத்திரிகைகள் யாவும் பதரி சுதேசவொற்றுமெய்க் கெட்டுப்போகுதெனக் கதரிநிற்க சுதேச மித்திர னென்னும் ஓர் பத்திரிகையில் மட்டும் (அறிவீனர்களாகுங் கீழ்சாதியாரைக் கிறீஸ்தவர்களாக்குவதற்கு முயலுகிறார் களென்றும்) கிறிஸ்தவப் பறையர்கள் குடிசைகளை என்றுங் குறிப்பிட்டு கூறியிருக்கும் வாக்கியங்களைக் காணுங்கால் பறையரென்போர் மீதுள்ளப் பொறாமெயே இத்தகைய வார்த்தையை வரைய நேரிட்ட தன்றி வேறில்லையாம்.

காரணம் பறையர்களும் நம்மைப்போல் இரத உற்சவமும் ஊர்வலமும் செய்யலாமோ என்பது போலும். அந்தோ இனியேனும் நமதன்பார்ந்த பத்திராதிபர் தன்னவ ரன்னியரென்னும் பேதமிராமலும், தன்சாதி புறசாதி யென்னும் பொறாமெய் இல்லாமலும், தன் சமயம் புறச்சமயமென்னும் பற்றில்லாமலும், தான் விவேகி மற்றவர்கள் அவிவேகியென்னுஞ் செருக்கில்லாமலும் பலர்ப் பிரயோசனங் கருதி பத்திரிகை வரைவாரேல் பாக்கிய மவருடைத்ததேயாம். அன்றேல் சிலாக்கிய மெம்முடையதே.

- 1:27; டிசம்பர் 18, 1907 –

10. கனந்தங்கிய சுதேசமித்திரன் பத்திராதிபருக்கு சுவர்ணபூஷணஞ் சூடல்

ஜூபிலி என்னும் வார்த்தை ஜூயு - ஜூயிஸ் என்னும் வார்த்தையினின்று தோன்றியது. இவ்வி ஜூபிலி எனும் வார்த்தையின் பொருள் ஜூதர் அல்லது யூதர் ஐன்பதாவது வருடக் குதூகலமென்று கூறப்படும்.

ஜூயிஸ்களுக்குள்ள இவ்வகைக் கொண்டாட்டத்தை நமது கருணை தங்கிய ஆங்கிலேயர்களில் சிலர் தாங்கள் வதுவை முடித்து சாதியும் பதியும் இருபத்தைந்தாண்டு சுகவாழ்க்கை பெரின் வெள்ளி ஜூபிலி என்றும், ஐன்பது வருடம் சுகவாழ்க்கை பெரின் தங்க ஜூபிலி என்றும், எழுபத்தைந்து வருடஞ் சுகவாழ்க்கை பெரின் வைர ஜூபிலி என்றுங் கொண்டாடி வருகின்றனர்.

இவற்றுள் வெள்ளி ஜூபிலியின் கொண்டாட்டம் யாதெனில், ஒவ்வோர் பந்துக்களும் இனியர்களும் வெள்ளியினாற் செய்த கரண்டிகளும், வெள்ளியினால் செய்த பாத்திரங்களும், வெள்ளியினால் செய்த விசிரிகளும், வெள்ளியினால் செய்த உருவங்களும், வெள்ளியினால் செய்த விருட்சங்களும், வெள்ளியினாற்செய்த கழுத்தணிகளும், சங்கிலி காப்பு முதலியவைகளுங் கொண்டுவந்து சதிபதிக் களித்து சந்தோஷங் கொண்டாடுவர்.

பொன் ஜூபிலியென்பதியாதெனில், பொன்னினாற் செய்த மோதிரம், காதணி, காப்பு, சங்கிலி, பாத்திரம் முதலியவைகளில் ஒவ்வொன்றைக் கொண்டுவந்து சதிபதிக்களித்து சந்தோஷங் கொண்டாடுவர்.

வைரஜூபிலி என்பது யாதெனில், வைரத்தினாற்செய்த மோதிரங்களும், வைரத்தினாற்செய்த பதக்கங்களும், வைரத்தினாற்செய்த காதணி, கழுத்தணிகளுங் கொண்டுவந்து சதிபதிகளுக்கீய்ந்து சந்தோஷங்கொண்டாடுவர்.

இத்தகைய ஜூபிலியென்னும் பரதேசிகட்செயல்களை சுதேசிகள் பற்றுக்கொண்டு சுதேசமித்திரன் பத்திராதிபர் அவர்களுக்கு ஜூபிலி கொண்டாட்டமென்று கூறிய யூதவார்த்தையை நீக்கி சுவர்ண பூஷணானந்த மெனக் கொண்டாடி இருப்பாராயின் மங்கா மகிழ்ச்சியை தந்திருக்கும். அங்ஙனமின்றி சுதேசிகளென்றும் மிதவாதிகளென்றும் அமிதவாதி களென்றும் ஏற்பட்ட அன்பர்கள் இரசவாதிகளுக்கொப்பாய் ஜுபிலி என்னும் பெயரை ஏற்றுக் கொண்டபோதிலும் அதனை வெள்ளி ஜூபிலி என்று கூறி பொன்னினாற்செய்த பதக்கங்களையும் பொன்னினாற்செய்த மோதிரங்களையும்,