பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36 / அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு


சுகம் பெறச் செய்வார்கள். அங்ஙனமின்றி தங்கள் சுயப்பிரயோசனங்களுக்காகப் பொய்யாகிய சாதிக் கட்டுப்பாடுகளை ஏற்படுத்தி தாழ்ந்த சாதி யென வகுத்துள் ளவர்களை இன்னுந் தாழ்ந்த சாதிகளாக்க எண்ணங் கொள்ளுவார்களாயின் இவர்கள் எடுக்கும் விஷயங்கள் யாவும் முடிவு பெறாது தங்கள் பூர்வநிலைக்கே வருவார்களென்பது சாத்தியம் சாத்தியமேயாம்.

- 4:6; சூலை 20, 1910 –


52. கடவுள் இல்லை

வினா : பகவன் கௌதம புத்தர் பரிநிப்பாணம் அடையுமுன்னர் தன்னிடமிருந்த மக்களை அழைத்து என்னைக் கும்பிடாதீர்கள் நான் கடவுளல்ல. கடவுள் ஒருவரிருக்கிறார் அவரில்லாது உலகம் நடவாதெனத் திருவுளம் பற்றிய தாகவும், உலகத்தின் நன்மையை நாடி பாடுபட்ட பகவன் மொழிந்த தொருவரிருக்கத் தற்காலந் தோன்றியுள்ள பௌத்தர்கள் கடவுளில்லை என்று சொல்வதோடு நோட்டீஸ்கள் போட்டுப் பிரசங்கஞ் செய்துவருகிறார் களென்றும் ஒரு பிரசங்கியாரால் புகலக் கேட்டு மெத்த சந்தேகத்தை உடையவனானேன். ஆகையால் எனதன்புள்ள ஆசிரியரே எம்மீதுச் சினங்கொள்ளாமல் பகவன் திருவாய்மொழியின் அந்தரார்த்தத்தையும் பௌத்தர்கள் கடவுளில்லை எனுஞ் சூன்யர்களா என்பதின் உட்பொருளையும் இப்பத்திரிகை வாயிலால் நுலாதார நுட்பா யெடுத்தோதத் தம் திரு வடிகளைப் பணிகின்றனம்.

பி. எஸ். அச்சுதானந்தம், திருப்பத்தூர்

விடை : அன்பரே, தாம் வினாவியுள்ள சங்கை ஆதாரமற்றச் சங்கை யேயாம். அதாவது “புத்தபிரான் பரிநிருவாணமடையுங்கால் நான் கடவுளல்ல என்னைக் கடவுளென்று கூப்பிடாதீர்கள், கடவுள் ஒருவரிருக்கின்றார்” எனக் கூறியதுமில்லை, அத்தகைய மொழிகளை வரைந்துள்ள நூலுங் கிடையாது கடவுள், ஈசன், திருமால், சிவன், பிரமன் என்னும் மொழிகள் யாவும் புத்தபிரான் பரிநிருவாணமுற்ற நெடுங்காலங்களுக்குப் பின்னர் புத்த சங்கத்தோர்களால் வரைந்துள்ளவைகளாதலின் புத்த பிரான் காலத்தில் கடவுளென்னும் மொழி தோன்றிய துங் கிடையாது, எந்த சாஸ்திரிகளும் அவற்றை வற்புறுத்திக் கூறியதுங்கிடையாது. ஆதலின் தற்போதவற்றைக் கூறிய பெரியோர் அவர் கண்ட நூலையும் அதன் பெயரையும் அத்தியாயத் தையும் வரைவரேல் அதன் காரணகருத்தைக் கூறுவாம்.

- 4:10; ஆகஸ்ட் 17, 1910 -


53. கசாய்க் கடைகள்

வினா: திருக்குறள்

தினற்பொருட்டாற் கொள்ளாதுலகெனின் யாரும்
விலைப்பொருட்டா லூன்றருவா ரில்

இருபத்தாறாம் அதிகாரம் புலான் மறுத்தல் ஐந்தாம் குறளுரை ஊனை (மாமிஷத்தை) வாங்குவாரில்லாவிடில் விற்பாரில்லை என்று காணப்படுகிறது. இதினால் தெய்வப்புலவர் திருவள்ளுவநாயனார் குறளியற்றுவதற்கு முந்தியே கசாய் கடைகளிருந்திருக்குமதினால் தான் வற்புறுத்தியிருக்கிறார்ரென்றும், கசாய் கடைகள் இல்லாமலிருந்தால் அக்குறள் செப்புதற்கிடமில்லை என்றுஞ் சிலர் புகல்வதோடு பௌத்தர்கள் காலத்திலும் கசாய் கடைகள் இருந்ததென ஸ்தாபிக்கின்றனர். வேறு சிலர் அஞ்ஞானிகள் தோன்றிக் கசாய்கடைகள் ஏற்படுத்திய பின் குறளியற்றியிருக்கிற தென்கின்றனர். மற்றுஞ் சிலர் பொய் புராண மூட்டை வியாபாரிகள் குறளின் மகத்துவத்தைக் கெடுக்க வேண்டு மெனும் எண்ணத்தால் நூதனமாய்ச் சேர்த்தச்சிட்டிருப்பார்களெனப் புகல் கின்றனர். ஆகையால் எம்மீதுப் பெரிதுவந்து குறளின் உரை பிசகா? நூதனப் பாட்டா? என்பதையும், நாயனார் மூலக்கருத்தையும் விவரிக்க வேண்டுகிறேன்

ஆர். துரைசாமி உபாஸகன், மாரிகுப்பம்.

விடை : அன்பரே, தாம் வினவியுள்ள சங்கை மிக்க விசேஷித்ததேயாம். அதாவது, நாயனாரியற்றியுள்ளத் திரிக்குறள் மக்கள் சீர்திருத்த வழி நூலாகும்.