பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு / 101

இத்தகையக் கொள்ளையை மேற்கொண்டுளர். இக்கொள்கையுடையோரெல்லாம் இலவு காக்கும் கிள்ளைகளென்றே கூறலாம். ஆனால் பௌத்தரகளோ விசாரித்துத் தெளிய வேண்டியவர்களாதலின் 'புத்தர்' பரிநிப்பாணமுற்ற 3000 ஆண்டுகட்குப்பிறகு மைத்திரேய புத்தராக அவதரிக்கப்போகிறார் என கேள்விப்பட்டேன். ஏழாம் தோற்றமாகும் தேவகதியுற்றோர் மீண்டு மவனியிற் பிறவாறென, பௌத்த நூலாகிய சீவகசிந்தாமணி யுட்போதரும்,

“திருவிற் பொற்குலாவு தேர்ந்தார் தேவர் தன் தண்மெய் செப்பிற்
கருவத்து சென்று தோன்றார் காநிலந் தோய்தல் செல்லார்
உருவமே லெழுதலாகா வொளியுமிழ்ந் திலங்குமேனி
பருதியினி யன்ற தொக்கும் பன்மலர் கண்ணிவாடா.”

என்னும் பாடலால் பரிஷ்காரமாய் விளங்குகிறதாயினும் தங்களைக் கொண்டே தெளிந்துக் கொள்ள வேண்டுமென்பதென் அவாவாகலின் கிருபை பாலித்து விளக்குவீராக.

பி.எம். ராஜரத்தினம், சாம்பியன் ரீப்ஸ்

விடை : அன்பரே தாமு சாவியுள்ள சங்கை அஞ்ஞானிகளுக்குரியதேயன்றி ஞானிகளுக்குரியதன்றாம். ஓர் மனிதன் இராகத்து வேஷமோக மென்னுங் காம வெகுளி மயக்கமற்று தேவனிலையாம் நிருவாணம் பெறுவதே மிக்க கஷ்டமாம். அத்தகைய தேவநிலையாம் ஏழாவது தோற்றத்தினின்று புழுவாகத் தோன்றி விட்டிலாகப் பரந்துவிடுவது போல் தேகத்தினின்று ஒளிமய வுருவாய் மாற்றிப் பிறப்பது அதனினுங்கஷ்டமாம். அநித்தியத் தினின்று நித்தியம் பெற்றவர்களும் துக்கத்தை நீக்கி சுகத்திலிருப்பவர்களும் மரணத்தை வென்று பிறப்பற்றவர்களுமானோர் மறுபடியும் பிறப்பதற்கேனும் தோற்றுவதற் கேனும் ஏது கிடையாவாம். தோற்றத்திலுண்டாய கஷ்டம் அவரவர்களுக்கே விளங்கியுள்ளதால் மீண்டுமுலகத்தில் தோற்றி மிக்கதுக்கத் திற்காளாக மாட்டார்கள் என்பது துணிபு.
ஞானிகளோ மனமாசகன்று கருணாகர நிலையுற்று கடந்த ஞானிகளைக் கண்டு களித்தே நிற்பர். அஞ்ஞானிகளோ தங்கள் தேவன் வருவார் வருவாரென்று சொல்லிக்கொண்டே மாள்வர். இதுவே யநுபவமுங் காட்சியுமாதலின் அத்தகையோர் படாடம்பமொழிகளை செவிகளில் நுழையவிடாது தங்களுள் அவதரிக்கும் பேராசை, கோபங், காமம், டம்பம், வஞ்சின முதலியவைகளை அவதரிக்கவிடாமல் நசித்து சாந்தம் அன்பு யீகையாம் உண்மெய்யில் அவதரிப்பீரேல் உம்மெயும் ஓர் புத்தர் தோன்றினாரென்றே கொண்டாடுவார்கள். இதுவே தோன்றும் புத்தர்கள் நிலையாம்.

- 7:43; ஏப்ர ல் 1,1914 -
 

130. பாஷாணங்களின் முறிவு

தேவரீர் தமிழன் பத்திராதிபராகிய பண்டித பெருமானே, யான் சென்னையிலிருக்குங்கால் தங்களால் நீலகிரியிலிருந்து உவாந்திபேதியின் உற்பவமும் அதன் சிகிட்சையும் கண்டு வெளியிட்டிருந்த நோட்டிசு எனக்குக் கிடைத்து. அதை சின்னையா பண்டிதரிடமும் முத்திருளு பண்டிதரிடமும் காண்பித்துப் பேசிக்கொண்டிருந்தபோது அவர்கள் தங்களைப் பற்றிக் கூறியதாவது: தங்கள் தலைமுறை தலைமுயைாக வயித்தியத்தை நாடாத்திவருகின்றவர்களென்றும் பழைய சாஸ்திரங்கள் பலதும் அவர்களிடம் உண்டென்றும் தங்கள் தகப்பனார் உத்தியோகஞ் செய்துகொண்டே பச்சைக் கற்பூரம் பூநீலம் சோபு முதலியதும் மயிலாப்பூரில் தங்கி செய்து வந்ததாகவும் சிறப்பித்துப் பேசினார்கள். ஆயினும் யான் தங்களை தரிசித்தது கிடையாது. இத்திருவனந்தபுரம் வள்ளுவநாட்டில் வந்து சேர்ந்து முப்பது வருஷகாலமாக வைத்திய சீவனத்தினாலேயே சீவித்து வருறேன். ஆயினும் இந்தியதேச வைத்திய சிறப்பைப்பற்றி தமிழன் பத்திரிகையிலெழுதியுள்ளதை சென்னையினின்று வந்தவன்பர் ஒருவர் காண்பித்தத்தைக் கண்டு மிக்க வானந்தமடைந்ததுடன் எனக்கு நெடுநாள் தெரியாதிருக்கும் பாஷாணங்களின் முறிவைக் கேட்டுக்கொள்ள வேண்டுமென்னு மாசை வெகுவாகத் தோன்றியது.