பக்கம்:1921-சென்னை மீன் செய்குளங்களின் அறிவிப்பு புஸ்தகம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

10


யில் அவைகள் அநேக வருஷங்கள் இருக்கின்றன. பின்பு சில காலத்தில் அவைகட்கு ஒரு புது சுபாவ உணர்ச்சி உண்டாகிறது. அதாவது தாங்கள் தற்காலமிருக்கும் உள் நாட்டு நீர்க்கால்களில் உள்ள வாசஸ்தலங்களை விட்டு எவ்விதமான இடஞ்சல்களையும் கவனியாமல் கடலுக்குப் போகவேண்டுமென்றும் விருப்பம் உண்டாகிறது. அதே சமயத்தில் அதன் தோல் நிறமும் மாறுகிறது. கறுப்பு கலந்த பழுப்பு நிறமாய் இருந்த தோல்போய் இப்பொழுது பொன் போன்ற மஞ்சள் நிறமுள்ள தோலாய் மாறுகிறது. அது கலியாண உடுப்பைப்போல் தோன்றும்.

கடல்கரையோரம் வந்தவுடன் முதிர்ந்து பிராயமான விலாங்குகள் கடலுக்கு நீந்திப்போய் அங்கே முட்டையிட்டு அவைகள் தங்கள் ஆயுளை முடிக்கின்றன. ஆனால் அப்பொழுது நடக்கும் வர லாறு ஒன்றும் நமக்கு தெரியாது. யோசித்துப்பார்க்கையில் அந்த வயது சென்ற விலாங்குகள் அங்கேயிறந்து போகின்றன என்று தோன்றுகிறது. ஏனெனில் விலாங்கு மீன்கள் கரைக்குச்சமீபமாயுள்ள ஆழமில்லாத இடங்களுக்காவது அல்லது தாங்கள் முன்னிருந்த ஆறுகளுக்காவது திரும்பிவருவதில்லை.


சாதாரணமாக சென்னையில் அகப்படும் இரண்டு விலாங்குகள்.

இந்தவிலாங்கு மீன்களுக்கு நெருங்கிய சம்பந்தமாயினும், இதைப்போல் அவ்வளவு விநோதமான ஜீவசரித்திரமில்லாதது கடல் விலாங்கு என்பது (Muraena group). இந்த கடல் விலாங்குகள் அனேகமாய் நல்ல தண்ணீரில் வாசம் செய்யும் சாதாரண விலாங்குகளைப்போலல்லாமல் பலவகைப்பட்டன. அவைகளின் நிறமும் ஆச்சர்யப்பட த்தக்கதாய்ப் வேறுபட்டிருக்கும். சிலவற்றிற்கு மிகவும் சிறு புள்ளிகள் நிறைந்திருக்கும். வேறு சிலவற்றிற்கு, வெள்ளையும் மஞ்சளும் கலந்த வரிகள் நிறைந்திருக்கும். வேறு சிலவற்றிற்கு சலவைக்கல் போல் பல நிறங்கள் கலந்திருக்கும். சில மீன்கள் அநேகமாய்க் கறுப்பாய் இருக்கும். வேறு சில மஞ்சள் நிறமாயும் அனேக மீன்கள் பழுப்புநிறமாயும் இருக்கும். அவைகளுக்கு மார்புத்துடுப்புகள் இல்லா ததினால், அவைகளுக்கும் சாதாரண விலாங்குகளுக்கும் வித்தியாசம் நன்றாய்த்தெறியும்.

அவைகளுடைய முகம், கொடுமைத்தோற்றமுள்ளவைகளாயிராவிட்டால் அவைகள் மிகவும் அழகானவைகளென்றே சொல்ல வேண்டும். அவைகள் பார்வையைப்போல்தான், குணமும் இருக்கிறது. உண்மையிலே அவைகள் பொல்லாதவைகள்தான். எப்பொழுதும்