பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமது மனைவியைப்பற்றிய பாக்கள்

நன்னெறியைப் பற்றி நிற்கு நல்லோரு மேதவறு
மந்நெறியை யோரா தநுதினமு- முன்னெறியைப்
பின்பற்றி யான்செல்லப் பேசிநின்று வான்சென்ற
தென்புத்தி பெண்ணே யியம்பு.

பிழையென்றே கொண்டாலும் பேதாய் கொழுநன்
பிழையென்றே தாங்கலுயர் பெண்டிர்க் -- கழகென நூல்
சொன்னதுவெல் லா மறந்து தொல்லுலகில் யான்வருந்த
வென்னதுகொண் டேகினைவா னின்று.

மாதருக்குண் மிக்க மதியுடைய பெண்மணிநீ
யேதமென வுட்கொள்ளா யென்செயலை - யாதலினா
லென்னடப்பைத் தாங்காம லேகாய்வான் வறேதோ
வுன்னடப்புக் கேது வுள. ரு

உன்குணமு முன்னன்பு முத்தமமாம் பண்புகளு (தோ
மென்குணத்தினேழைமையா லெண்ணாது-வன்குணத்
டுன்னைமிகத்தொந்தரித்தேனொவ்வாதோவஃதுனக்கிங்
கென்னைவிடச் சென்றா யெழுந்து.

அல்லதுனக் கியான்செய்த வாகாச் செயல்களுன்னி
வல்லதுணை யாமெவர்க்கு மாதேவ- னல்லதுணை
யென்றவன்பா லேகினையோ வென்னவரும் யானுமிவ
ணின்று துயர் கொண்டுழல நீ.

எல்லவருந் தானென்றே யெண்ணுமுயர் சற்குருவா
நல்லவரே சார்வள்ளி நாதனுட னல்லலின்றிக்
குற்றாலஞ்சென்றிருக்கக்கொண்டதியான் கண்டுடனே
செற்றாயோ நீதான் றிகைத்து.

9