பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடற்றிரட்டு


நீநா னொருவனென நீமொழிந்தாய் நான்மறையு
நீநா னொருவனென நிச்சயித்த - கோனேயென்
மைத்துனனின் மைத்துனனாம் வாய்மைகண்டு நீணிலத்தென்
மைத்துனற்கு நல்குகநல் வாழ்வு.

அண்டரெலாம் போற்ற வருளளிக்கு நீயிங்குத்
தொண்டருள நிற்குஞ் சுகமென்று - கண்டபின்னு
முள்ளமதி னோயென்ப துண்டென்றா லுன்னையிவண்
கள்ளனெனக் கூறாரோ காண்.

அன்பருளவெப்பத்தையாற்றியின்பால்கவெண்ணெய்
தின்பலெனக்கொண்டவுண்மைதேராது- மன்புவியர்
கள்ளனெனக் கூறலுற்றார் கண்ணா வவர்வார்த்தை
தள்ளுவனே குற்றமெனத் தான்.

சேமத்தைப் பெற்றிடற்குச் சிந்தித்துன் சேவடியை
நேமமதாப் போற்றுகின்றே னித்தியமுந் - தாமத்
திருமாலென் மைத்துனனைச் சேர்ந்தவெலா நோயு
மருமையுட னீக்கி யருள்.
Je
அநுமனெனும் பேர்பெற் றநுதினமு மிராமன்
றநுவினலம் போற்றுந் தகைமை -ய ய நுசரித்த
வல்லவனை யாட்கொண்டமாலேயென் மைத்துனனி
னல்லலெலா மாற்றி யருள்.
அறுசீர் விருத்தம்.
ஆரண முதலு மாகி யறிவினுக் கறிவு மாகி
காரண மெவைக்கு மாகிக் காண்பன வனைத்து மாகி
வாரண மழைக்க முன்னாள் வாவியிற் றோன்றிக் காத்த
நாரண வெனது மைத்து னற்குவாழ் வருள் செய்வாயே
16

16