பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடற்றிரட்டு அன்புமிகு தம்பி அயலார் அரணுள்ளே என்புநரம் பூன்தடிதோல் எல்லாமும்- வன்புறவே பெற்றேன் இனியான் பிணியறுத்தேன் மூப்பறுத்தேன் கற்றேன்சா வாமருந்தும் காண். GA ஆதலினால் என்இளையாய் யான்இங்கு மாய்வலென நோதலினால் நீயுற்ற நோய்விடுப்பாய் - காதலினால் மக்களயல் ஊரேக மையலுற்ற தாயவர்தன் பக்கமுற அஃதொழித்த பாங்கு. arr "யானை எருத்தம் பொலியக் குடைநிழற்கீழ் சேனைத் தலைவராய்ச் சென்றோரும் ஏனை வினைஉலப்ப வேறாகி வீழ்வ"ரெனும் வாக்கை நினைஉரத்திற் கஃதோர் நெறி. எ அண்ணன் அழியினும்தன் அன்னைபிதா வீயினும்தன் கண்ணன்ன மக்களிடு காடுறினும் - நண்ணும் அவருடைய ஊழால் அழிந்தனரென் றுள்ளக் கவலைவிடல் மாந்தர் கடன். அ நம்மைநிகர் கோமக்கள் நானில்மெல் லாம்பகைவர் தம்முடைய வாக்கொளினும் சற்றேனும் - விம்மலுறா தந்நிலமெல்லாம்ஈட்டி ஆள்தல் கடனறிவாய் எந்நிலமும் தம்மையுற இங்கு. அறிவுருவுன் ஆன்மா அறிவுமிகு தம்பி அறிவுருநம் அன்னைபிதா ஆதி - அறிவுருவே எவ்வுலகும் ஆதலினால் இன்னினிநீ நல்லறிவுற் றிவ்வுலகில் வாழ்வாய் இனிது. 52 du ய