பக்கம்:1915 AD-வள்ளியம்மை சரித்திரம், வ உ சி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

வள்ளியம்மை சரித்திரம்.

சிறப்புப்பாயிரம்.

பூவுல கின்கட் பொலிதரு பல்லுயிர்
தம்முள் மேன்மை சாரும் மாக்கள்
உய்வழி நான்கா ஓதும் நான்மறை;
அவ்வழி நான்கும் நான்கா சிரமம்
புகுவோர் யார்க்கும் பொருந்து மேனும்,
இல்லறம் புகுந்தோன் எவர்க்கும் உதவி
மூவிடத் தவர்க்கும் ஓவலில் நன்மை
பயக்கப் பயிறலின், அவனறம் பல்கால்
எவற்றினும் சிறப்புடைத் தென்ப மேலோர்.
அதுபற்றி யன்றே ஒளவையும் முன்னாள்

"இல்லற மல்லது நல்லறம் அன்" றென்
றோதினள். அத்தகை யேதமில் நல்லறம்
குற்ற மின்றிக் குறைவற முற்றத்
துணை நல மாவது மனநல முடைய
மனைவி யொன்றே யாகும் : மற்றைச்
செல்வமெல்லாம் சிதையினும் சிதைக,
சுற்றம் யாவும் துறக்கினும் துறக்க,
மித்திரர் சத்துரு வாகினு மாகுக,
வாழ்க்கை பயன்பெறும். அன்றி யம்மனை
கணவன் சொல்கட் கிணக்க மிலாளாய் ௳௰