பக்கம்:1915 AD-வள்ளியம்மை சரித்திரம், வ உ சி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32
வள்ளியம்மை சரித்திரம்

மும்மலமாம் அல்லை முனிந்தோட்டி மூதுலகில்
நன்மையெனுந் தேசை நனிபரப்பிச்—செம்மையொடு
நின்றுணர்த்தும் மெய்ப்பொருளை நீள்உலகில் யாவர்க்கும்
இன்றுணர்த்தும் நற்றொழிலை யேற்று. ௱௮௧

எற்குருகி ஞானம் இனிதருளி யென்னுடைய
நற்குருவாய் வந்தவள்ளி நாயகமாஞ்—சிற்குருவை
இம்மகள்தான் கண்டால் இருநிதிபெற் றோருளம்போல்
தன்மனத்தில் மிக்கின்பம் சார்ந்து. ௱௮௨

என்றவப்பே றுற்றனன்யான் என்றெதிருற் றேவணங்
நின்றுபல நன்மொழிகள் நேமமொடு—நன்றுறவே [கி
சாற்றி அவனுடைய தண்ணருள்பெற் றின்புறுவள்
போற்றி அவன்நற் புகழ். ௱௮௩

அன்னவனுக் குள்ளன்போ டாம்பணிகள் யாவுஞ்செய்
தின்னமுது மாண்போ டினிதருந்த—நன்முகமன்
பல்காலுங் கூறிடுவள் பண்போ டவன்மகிழப்
பல்கால முந்தான் பணிந்து. ௱௮௪

போனகமுண் டப்பெரியோன் புண்ணியத்தாள் கேள்வனொடு
ஞானமுள பல்லோர் நடுவிருந்து—கோனெனவே
சொல்லரிய மாண்சேர் சுருதிப் பொருளுரைக்க
மெல்லியலுங் கேட்கும் விழைந்து. ௱௮௫

தன்னா யகன்போலுந் தான்கேட் டகமகிழ்ந்திம்
மின்னாள்நல் ஞானம் மிகவுறுவள்—பன்னாளும்
இற்றொழிலுங் கேள்வற் கிசைதொழிலும் நற்றவருக்
குற்றபணி யுஞ்செய் துவந்து. ௱௮௬