பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொல்காப்பியம் . இளம்பூரணம் 2.-ம், புளிய ஞெரி, நுனி, முரி, யாழ், வட்டு என வரும். உரையிற்சோட லென்பதனால், புவிய விலை எனவும் உயிர் வருவழிக் கேடும் சொள். க.உ. இன்னென வரூஉம் வேற்றுமை யுருபிற் பின்னென் சாரியை பின்மை வேண்டும். இஃது, இன் சாரியை முழுவதூஉம் கெடும் இடம் உணர்த்துதல் நுதலிற்று. - இ-ள் :--இன் என வரும் வேற்றுமை உருபிற்கு-இன் என்று சொல்ல வரு சின்த வேற்றுமையுருபிற்கு, இன் என் சாரியை இன்மை வேண்டும்-இன் என்னும் சாரியை தான் இன்றி முடிதல் வேண்டும். உ-ம். விளவின், பலாவின் என வரும், அவற்றுள் இன்னின் இகசம்” (புணரியல்-க.) என்ற தன் பின் வையாததனால், சிறுபான்மை இன் சாரியை கெடா துபற்றல் கொள்க, பாம்பினிற் கடிது தேள் என வரும். ந... பெயருக் தொழிலும் பிரிந்தொருங் கிசைப்ப வேற்றுமை உருபு நிலைபெறு வழியும் தோற்றம் வேண்டாத் தொகுதிக் கண்ணும் ஒட்டுதற் கொழுகிய வழக்கொடு சிவணிச் சொற்சிதர் மருங்கின் வழிவந்து விளங்கா திடைகின் றியலுஞ் சாவியை வியற்கை உடைமையு மின்மையு மொடுவயி னொக்கும். இது, சாரியைகட்கெல்லாம் பொதுவாயதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. இ-ள் :- பெயரும் தொழிலும் பிரிந்து ஒருங்கு இசைப்ப-பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லும் பெயரும் வினையுமாய்ப் பிரிந்தும் பெயரும் பெயருமாய்க் கூடியும் இசைப்ப, வேற்றுமை உருபு நிலை பெறு வழியும்-வேற்றுமையுருபு தொகாது நிலை பெற்ற இடத்தினும், தோற்றம் வேண்டா தொகுதிக்கண்ணும்-அவை தோற்றுதல் வேண்டாத தொகுதிக்கண்ணும், ஒட்டுதற்கு ஒழுகிய வழக்கொடு சிவணி- தாம் தாம் பொருந்து தற்கேற்ப நடந்த வழக்கோடு பொருந்தி, சொல் சிதர்மருங்கின்-சாரியை பெறும் புணர்மொழிகளைப் பிரித்துக்கானுமிடத்து, வழி வந்து விளங்காது இடை நின்று இயலும்-அவற்றின் பின் வந்து விளங்காது அவற்றிடையே நின்று நடக்கும், சாரியை இயற்கை-சாரியையின் இயல்பு.உடைமையும் இன்மையும் ஒடுவயின் ஒக்கும்அவைதாம் உண்டாதலும் இல்லையாதலும் ஒரு உருபினிடத்து ஒக்கும், உ-ம், விளவினைக் குறைத்தான், விளவினைக்குறைத்தவன் எனவும், நிலாத்துக் கொண்டான், நிலாத்துக்கொண்டவன் எனவும் வரும். | ஒட்டுதற்கொழுகிய வழக்கன்மையின், நிலாக்கதிர் நிலாமுற்றம் என்பன சாரியை பெறாவாயின. . எல்லாகம்மையும் எனச் சாரியை ஈற்றின்கண்ணும் வருதலின், இடையின்றி யறல் பெரும்பான்மை யெனக்கொள்க,