பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொல்காப்பியம் - இளம்பூரணம் இஃது, அவ்வீற்றவிரவுப்பெயருட் சிலவற்றிற்கு எய்தியதுவிலக்கிப் பிறிதுவிதி வருந்தல் நுதலிற்று, இ - ன்:- ஆணும் பெண்ணும் அஃறினை இயற்கை-ஆண் என்னும் பெயரும் பெண் என்னும் பெயரும் மேல் தொகைமரபிலுள் "மொழிமுத லாகும்” (சூத்திரம் கி] என் பதன் கண் அஃறிணைப் பெயர் முடிந்த இயல்புபோல் தாம் வேற்றுமைக்கண் இயல்பாய் முடியும். உ - ம். ஆண்கை , பெண்கை ; செவி, தலை, புறம் எனவரும்.' மற்றிது தொகைமரபினுள் "அஃறிணை விரவுப்பெயர்”(சூத்திரம்-யங.) என்பதனுள் இயல்பாய் முடிந்ததன்றோ வெனின், இவை ஆண்டு முடிந்தனபோலத் தத்தம் மரபின் வினையாற் பாலறியப்படுவனவன்றி, இருதிணைக்கண்னும் அஃறிணையாய் முடிதலின் அவ்வஃறிணைப்பெயாது இயல்போடு மாட்டெறித்து முடித்தான் எனக்கொள்க, இவ் வாருதலின், ஆண்கடிது பெண்கடிது என்னும் அல்வழியும் “ மொழிமுத லாகும்" [தொகைமரபு-6] என்பதனுட் கொள்ளப்படும். காடு. ஆண்மாக் கிளவி யரைமா வியற்றே. இது, திரிபுவிலக்கிச் சாரியை வகுத்தமையின் எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத் தல் முதலிற்று, இ-ள்:-ஆண் மரக் கிளவி அரை மர இயற்று - ஆண் என்னும் மரத்தை உணர நின்ற பெயர்ச்சொல் அரை மரம் அம்முப்பெறும் இயல்பிற்றாய்த் தானும் அம்முப் பெற்று முடியும். உ - ம். ஆணக்கோடு; செதின், தோல், பூ எனவரும். களசு. விண்ணென வரூஉக் காயப் பெயர்வயின் உண்மையு முரித்தே பத்தென் சாரியை செய்யுண் மருங்கிற் றொழில்வரு காலை. இது, செய்யுளுன் திரிபு விலக்கிச் சாரியை வகுத்தல் முதலிற்று, இ.!- விண் என வரும் காயப் பெயர்கூயின் - விண் என்று சொல்லவருகின்ற ஆகாயத்தை உணர நின்ற பெயர்க்கண், அத்து என்னும் சாரியை உண்மையும் உரித்து அத்து என்னும் சாரியை உண்டாதலும் உரித்து இல்லையாதலும் உரித்து, செய்யுள் மருங்கின் தொழில் வரு காலை செய்யுளிடத்து வினை வரும் காலத்து. உ - ம், விண்ணத்துக் கொட்கும் எனவும், “விண்குத்து நீன்வரை” (காலடிஉஉசு) எனவும் வரும், நளன. தொழிற்பெய ரெல்லார் தொழிற்பெய ரியல. இஃது, இவ்வீற்றுட் சிலவற்றிற்குத் திரிபு விலக்கி உகரமும் வல்லெழுத்தும் வகுத்தல் நுதலிற்று. இ-ன்:--தொழிற் பெயரெல்லாம் தொழிற் பெயர் இயல-னசாரவீற்றுத் தொழிற் பெயரெல்லாம் அல்வழிக்கண்ணும் வேற்றுமைக்கண்ணும் ஞசாரவீற்றுத்தொழிற் பெயரது இயல்பாய் வன்கணம் வந்தவழி வல்லெழுத்தும் உகரப்பேறும் மென்கணமும் இடைக்கணத்துவகரமும் வந்தவழி உகரமும் பெற்று முடியும்.