பக்கம்:அண்ணாவின் ஆறு கதைகள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 


விபசாரியா?”– கோபத்துடன் இக் கேள்வி பிறக்கிறது.

"ஆமாம்”– சோகம் கப்பிய குரலில் பதில் வருகிறது.

கேள்வி கேட்டவர் திகைத்து நிற்கிறார். அவர், வெட்கத்தால் அவள் நிலைகுலைந்து நிற்பாள் என்று எதிர்பார்த்தார். பதிலோ அவ்விதமில்லை. அவள் பேச்சை நிறுத்தவில்லை.

“ஆமாம் – ஏன் என்றா கேட்கிறீர்கள் ? – அவள் குரலிலே சோகத்தையும் சிதைத்துக் கொண்டு, நகைச்சுவை வெளிவந்தது.

“இல்லை”– பயத்துடன் பேசலானார் அவர்.

“அந்தக் கேள்வியைக் கேட்டுவிடாதீர்!” – அவள் பேசுகிறாள் – பேச்சா அது! கேலி செய்கிறாள்!

“ஏன் தைரியமாகப் பேசும் பாவனையிலே, திகிலைத் திறையிட்டுப் பேசுகிறார் அந்த ஆசாமி.

“நான் ஏன் விபசாரியானேன் என்ற கேள்வியைக் கேட்டுவிட்டால், குற்றவாளி யார் என்று கண்டுபிடிக்க வேண்டிய வேலை உமக்கு ஏற்பட்டுவிடும்.” அவள் தான் கூறினாள் – ஆனால், கேள்வி கேட்டவரின் கண்களுக்கு,