பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

ஒருபுறம் தொழிற் கூடங்கள்; மற்றொரு புறம் வேலையில்லாதார் கூட்டம்.

ஒருபுறம் அறநெறி நிலையங்கள், பிறிதோர் புறம் சுரண்டல் காரர்கள், சூது மதியினர், பதுக்கல்காரர், சந்தையினர். கள்ளச் சந்தையினர்.

கொலையும் களவும் சூதும் குடியும், நிரம்பிய இடம், நாடு அல்ல ; காடு — காடு கூட அல்ல; அங்கு மது விற்பதற்காக ஒர் ஏற்பாடும் இல்லை. கொடுமையை மறைத்திட பட்டாடை இல்லை. பாதகத்தைச் செய்தும் தப்பித்துக் கொள்ள பணம் எனும் ஆயுதம் இல்லை ;

காந்தி அடிகள் இந்தியாவை, மாண்புமிகு நாடு ஆக்கிட விரும்பினார் —சூதற்ற, சுரண்டலற்ற, வகுப்புப் பேதமற்ற, நாடாக ஆக்க விரும்பினார். அவர் பிறந்த நாளைக் கொண்டாடும் நாம் காணும் நாடு எத்தகைய நிலையில் இருக்கிறது.

வகுப்புக் கலவரம்

தீண்டாமைக் கொடுமை

வலியோர் சிலர் எளியோர் தமை வதைபுரியும் கொடுமை.

கலாம் நெளியும் நகரங்கள்

கவலை ததும்பும் கிராமங்கள்

அரசியற் சூதுகள்

சமுதாயச் சதிகள்- ஆகிய எல்லாம் நெளிகின்றன; அடக்குவார் எவர் உளர் என்று கொக்கரித்தபடி.

ஜனநாயகம் நடக்கிறது — மொழி ஆதிக்கச் சண்டை கூட ஓயவில்லை.

காந்தியடிகளின் பிறந்த நாளைக் கொண்டாடுகிறோம்! கள்ளுக்கடை ஒழிப்பிலே கூட வெற்றிகாணாமல், கடைகளைத் திறந்து வைக்கவும் துணிந்த நிலையில்! காந்தி அடிகள் மகான்,