பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

என்பள்ளிப் பருவத்தில் காலணா நாணயத்தில் துளை போட்டு குச்சியைச் செருகி அதைத் தக்கிளியாக்கி நூல் நூற்போம். ராட்டை வந்தது, சர்க்கா வந்தது, அதற்குப் பிறகு டெக்ஸ்டூலில் தயாரான கருவியாக இருந்தாலே நல்லதென்ற நிலை ஏற்பட்டுள்ளது.

கருவிகள் பெரியதாக இருந்தாலே அவற்றில் தயாராகும் பொருள்களின் விலை குறைகிறது என்பதால் அவை விரும்பப் படுகின்றன,எனவே மாறியிருப்பது நாங்கள் மட்டுமல்ல. கதர்த் தொழிலும் மாறிவந்துள்ளது.