பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33

ஒருவருக்கொருவர்
உதவுதல் வேண்டும்.

திரைப்படத் தயாரிப்பாளர்கள் தமிழகத்திலுள்ள இயற்கைக் காட்சிகளின் அழகை - உதகமண்டலத்தின் சிறப்பைக் குற்றாலத்தின் எழிலை - கொடைக்கானலின் சிறப்பை - மணிமாடக் கூடங்களை - தமிழகத்தின் சிறப்புமிக்க விழாக்களை - தமிழ்ப் பண்பாட்டை விளக்கி - சுற்றுப் பயண ஆர்வத்தை பிறநாட்டாரும் ஏற்கும்படி அமையும்படி இலவசமாகத் தயாரித்தளிக்க வேண்டுகிறேன். முடிந்தால் மத்திய அரசுடன் பேசி, படம் எடுத்த செலவைப் பெற்றுத்தரவும் முயலுகிறேன். -

அதேபோன்று குடும்பக் கட்டுப்பாடு திட்டம் பற்றியும் தனியான திரைப்படம் எடுக்க வேண்டும். நமது படங்களில் அந்தக் கருத்து இடையிடையே வருகிறதே தவிர முழுக்க. முழுக்க அந்த நோக்குடன் படம் எடுக்கப்படவில்லை. அந்த முயற்சியிலும் திரைப்படத் தயாரிப்பாளர்கள் ஈடுபடலாம்.

மற்றோர் படம் - கலப்படத்தைப் பற்றி எடுக்கலாம். ஒருவர் கலப்படம் மூலம் சம்பாதிக்கும் பணம் மேலும் பல கலப் படங்களைச் செய்யத்தான் பயன்படுகிறது. அவருக்கோ நாட்டுக்கோ நன்மை ஏற்படுத்தும்படி இல்லை என்று கூறும் கருத்துக்கு இசைந்த படம் ஒன்றை எடுக்கலாம்.

இவ்விதம் திரைப்படத் துறையினர் சர்க்காருக்கு உதவவும், சர்க்கார் அவர்களுக்கு உதவவும் இருவரும் சேர்ந்து நாட்டுக்கு உதவவும் கடமைப்பட்டிருக்கிறோம்.

கலையில்
அரசியல் பின்னிக் கிடக்கிறது!

திரைப் படத்தின் மூலம் எவ்வளவோ நல்ல கருத்துக்களைப் புகுத்த முடியும். ஆனால், நினைக்கிறபடி புகுத்த முடியாத நிலையில் இருக்கிறோம். இந்த நிலையை மாற்றிட

3