பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

எஸ். எம். கமால்

கணித்திருப்பதைப் புரிந்து கொள்ளலாம். இவைகளைப் பார்க்துக் கொண்டு சும்மா இருப்பது சரியல்ல என்பதை உணர்ந்த நான், சில ஆட்களை அனுப்பி வரத்துக்கால்களின் தடுப்புகளை அகற்றுமாறு அனுப்பினேன். அப்பொழுது, சின்ன மருதுவும், வெள்ளை மருதுவும், ஒரு படையுடன் வந்ததால், இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனை நிறுத்துமாறு கவர்னர் எனக்கும், எதிரிக்கும் உத்தரவுகள் அனுப்பினார். ஆனால் வரத்துக்கால்கள் பல இன்று வரை மூடப்பட்டுத்தான் உள்ளன.

மூன்றாவது : கவர்னர் ஜெனரலது உத்தரவைப் பெற்றுக் கொண்ட பிறகும் ஒரு எதிரியைப் போல நடந்து கொண்டது.

பதில் : எந்த சந்தர்ப்பத்தில் அவ்விதம் நடந்து கொண்டேன் என்பதைத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நான்காவது : கலெக்டர் உத்தரவுப்படி நடக்க மறுத்தது.

பதில் : கலெக்டர்களாக முன்னர் பணியாற்றிய, சுள்ளிவன், இர்வின், மக்லாய்டு, லாண்டன் ஆகியோர்களைப் புறக்கணித்ததாக புகார்கள் இல்லை. தொண்டியிலுள்ள தற்பொழுதைய கலெக்டரான பவுனி, அங்கு வந்து தன்னைச் சந்திக்க விருப்பம் தெரிவித்திருந்தார். நடைமுறைப் பழக்கங்களுக்கு புறம்பாக நான் நடந்து கொள்ளமுடியாது என்பதை அவருக்குத் தெரிவித்தேன். முந்தைய கலெக்டர்கள் எனது சீமையின் எல்லைக்கு வரும்பொழுது, அவரை அழைத்து வருவதற்கு எனது பிரதானியை அங்கு அனுப்பி வைப்பது வழக்கம். அவர்கள் இராமநாதபுரம் கோட்டைக்கு வரும்பொழுது நான் கோட்டைக்கு வெளியே சென்று அவர்களை வரவேற்பதுதான் எங்களது சம்பிரதாயம். பவுனி எனது கோட்டைக்கு வருவதாக இருந்தால் அவரை அவ்விதம் சந்திப்பதற்கு சித்தமாக இருப்பதைத் தெரிவித்தேன். தனது சீமையில் உள்ள தொண்டியில், கலெக்டருக்காக சிவகங்கைப் பாளையக்காரர்கள் காத்திராத பொழுது, நான் அவருக்காக எவ்விதம் தொண்டிக்குச் செல்ல இயலும் என்று முடித்திருந்தார்.[1]


  1. Revenue consultations. vol. 62B。25–5-1795, pp. 2040-43