பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

எஸ். எம். கமால்

ஆதலால் என்னையும் எனது எதிரிகளையும் நேரில் அழைத்து விசாரித்து தகுதியானது தகுதியற்றது எவை என்பதைத் தெரிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

"நான் துரைத்தனத்தாருடன் பொதுவாக பாரசீக மொழியில் தான் கடிதங்கள் பரிமாறிக் கொள்ளுவது வழக்கம். ஆனால் எனது முன்ஷி லாலா சாகிபுவை கைது செய்து கொண்டு சென்றுவிட்டதால், எனது கடிதங்களை எழுதுவதற்கு வேறு யாரும் இல்லை. எனது எண்ணங்களின் பிரதிபலிப்பில் ஏதும் குறைகள் இருந்தால் அதனை ஒரு பொருட்டாகக் கருதாமல், எனக்கு விரைவான பதிலை அனுப்பி வைப்பீர்கள் என எண்ணு கிறேன்....' இவ்வாறு அந்தக் கடிதத்தில் இராமநாதபுரம் சேதுபதி மன்னர் குறிப்பிட்டிருந்தார்.

12-4-1795-ல் எழுதிய இன்னொரு மடலில்,[1] ...இங்கிலாந்து நாட்டில், நீதி வழங்குதலையும் நன்கு அறிந்திருக்கிறேன். அந்த நாட்டில் யாராவது ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டால், அவர் அந்தக் குற்றச்சாட்டினின்றும் காத்துக் கொள்வதற்கு வாய்ப்பு அளிக்கப்படும். அதன் பிறகு தான் அவர் சிறையில் அடைக்கப்படுவார். நானும் நன்கு ஆட்சி செய்து அனுபவம் பெற்றிருக்கிறேன். விசாரணையின் பொழுது குற்றவாளியென உறுதிப்படுத்தப்பட்டாலொழிய ஒருவரை முடிவான குற்றாளியாகக் கருதுவது இல்லை. எனக்குத் தெரிந்தவரை யில் பவுனி, மார்ட்டின்ஸ் ஆகியோரது நடவடிக்கையினால் ஏற்பட்டுள்ள அவமானம், துயரம் ஆகியவைகளைத் தங்களுக்கு தெரியப்படுத்தியிருக்கிறேன். இதற்கிடையில் இராமநாதபுரம் பகுதிகளில் பறையறைந்து அறிவிப்பு ஒன்று கொடுத்துள்ளனர். இனிமேல் என்னை இராமநாதபுரம் சீமையின் மன்னராகக் கருதப்படக்கூடாது என்றும், இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு சீமையின் நிர்வாகம் கும்பெனியாரின் நிர்வாகத்தில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தகாத வழியிலும், நேர்மையற்ற முறையிலும் மக்களை நான் கொடுமைப்படுத்தியதாக சான்று வழங்குமாறும் அதற்கு மறுப்புத் தெரிவிப்பவர்களை கண்டனம் செய்தும் வருகின்றனர். தன்னிச்சையாக யாரும்


  1. Revenue consultations, Vol. 63 B, 12-4-1795, pp. 1798 1802