பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்

141

பட்டினத்தில் காட்டுத்தி போல் பரவியது. பட்டினமே திரண்டு வந்தது போன்று மக்கள் கூட்டம், மன்னருக்கு இறுதி அஞ்சலி செலுத்த பிளாக்டவுனில் குழுமியது.[1] மன்னரது இறப்பு அவரது சொந்த சீமையில், சொந்த ஊரில் ஏற்பட்டிருந்தால் அவருக்கு இறுதி சடங்குகள் எந்த அளவுக்கு ஆடம்பரமான கண்ணியமான முறையில் மேற்கொள்ளப்படுமோ அதே முறையில் 24- l-1.1809 அன்று நிறைவேற்றி வைக்கப்பட்டன.[2]

இந்த வைதீக முறைப்படியான கோதானம், பூதானம், சொர்ணதானம், தசதர்மம், பூரி, சொர்ணபுஸ்பம் ஆகிய வைதீக சடங்குகள் முடிந்தவுடன் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அரச உடையில் மன்னரது சடலம் கிடத்தப்பட்டது. வெண்குடை முன்னே எடுத்துச் செல்ல கட்டியக்காரர்கள், சாமரம் வீசுபவர்கள், காளாஞ்சி ஏந்துபவர்கள், ஆலவட்டம் பிடித்தவர்கள், தேவரடியார்கள், தீவட்டிக்காரர்கள் ஆகியோர் முன்னே நடந்து செல்ல தாரை, தம்பட்டை, மேள தாளம் முழங்க, பணியாளர்கள் வழியெங்கும் பூக்களைச் சிதற வாணவேடிக்கைகளுடன், பல்லக்கு ஊர்வலம் மயான கட்டம் அடைந்தது. அங்கு ஐம்பது வாழை மரங்கள் நடப்பட்டு தோரணங்களுடன் மயான மேடை அமைக்கப்பட்டு இருந்தது. முப்பது வீசை நிறையுள்ள சந்தனக் கட்டைகள் அடுக்கிய சிதையில் சேதுபதி மன்னரது உடல் வைக்கப்பட்டது. மக்களது இறுதி அஞ்சலிக்குப் பிறகு அவரது மூன்றாவது நான்காவது மனைவிகளின் மைந்தர்களான பட்டாபி இராமசாமித் தேவர், நெருஞ்சித் தேவர் என்ற இளம் சிறுவர் இருவர், சிதைக்குத் தீ மூட்டினர். கும்பெனியார் மீது மன்னர் கொண்டிருந்த வெஞ்சினம் வெளிப்பட்டது போல, சிதையின் நாலாபுறமும் சீறி எழுந்த அக்கினிச் சூழலில் மன்னரது உடல் எரிந்து, மறைந்து சாம்பல் ஆகியது.

மறவர் சீமையின் மானத்தையும் ஐக்கியத்தையும் காக்க அந்நியரை எதிர்த்த இணையற்ற மாவீரன், மறவர் திலகம்


  1. Madurai Collectorate Records, Vol. 1197. 1-2-1809 pp. 135-40.
  2. Revenue consultations, Vol. 167, 14–2-1809, pp. 312-31.