பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்

111

வந்த சர்க்கார் கிராமங்களைக் கொள்ளையிட்டு வந்தனர். ஆனால் புதிதாகப் பதவி ஏற்ற கலெக்டர் ஜாக்சன் கிளர்ச்சியை மேலும் பரவவிடாமல் ஒடுக்கினார்.[1] நாளடைவில் ஜாக்சனின் நிர்வாகம் ஒருபுறம் மக்களிடத்தில் இருந்தும் மற்றொருபுறம் அரசாங்கத்திடமிருந்தும் வெறுப்பையும் பழியையும் பெற்றது. வீரபாண்டிய கட்டபொம்முவை இராமநாதபுரம் அரண்மனையில் அவர் நடத்தியவிதம்,[2] தஞ்சைச் சீமை தானியங்களை மறவர் சீமையில் இறக்குமதி செய்ய மறுத்து, பரங்கியரின் வியாபாரத்துக்கு ஒத்துழைக்கத் தவறியது.[3] கும்பெனியாருக்கு கிஸ்தியாக வசூலித்த தானியங்களை அவரும் அவரது துபாஷ் ரெங்கப்பிள்ளையும் சேர்ந்து விற்று பல ஆயிரக்கணக்கான ரூபாய்களைக் கையாடல் செய்த ஊழல்,[4] ஆகிய காரணங்களினால் ஜாக்சன் பதவி விலகிச் சென்றார். அவரைத் தொடர்ந்து லூவிங்டன் பதவி ஏற்றார்.[5]

இதற்கிடையில் மறவர் சீமையை தமது உடைமையாக மாற்றிய பிறகு, கும்பெனியார் தென்பகுதியில் உள்ள எந்தப் பகுதியையும் பற்றி அக்கறை கொண்டதாகத் தெரியவில்லை. அவர்களது உள்ளத்தில் நிறைந்துவிட்ட ஆதிக்க வெறியை கி. பி. 1794-க்கும் கி. பி. 1795-க்கும் இடைப்பட்ட காலநடவடிக்கைகள் பிரதிபலித்தன. மணப்பாறை, திண்டுக்கல் பகுதிகளில் அவர்களது அட்டகாசம் முதலில் துவங்கியது. லெட்சுமி நாயக்கர் என்ற மனப்பாறை பாளையக்காரரது பரம்பரை உரிமையை ஒழித்தனர்.[6] புனிதத்தலமாகிய பழனிக்கோயிலின்


  1. Revenue Consultations, Vol. 89, 15-10-1798, pp. 3869-70
  2. Revenue Despatches to England, Vol. 26, 9-8-1797, pp. 367-412
  3. Revenue Despatches to England, Vol. 6, 15-10-1799, pp. 186-189
  4. Revenue Consultations, Vol. 95, 13-4-1799, pp. 881-88
  5. குரு. குகதாஸ்ப்பிள்ளை, திருநெல்வேலி சீமைச் சரித்திரம் (1928), பக். 214
  6. Board of Revenue General Report, Vol. II, 31–8–1795, pp. 74