பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

எஸ். எம். கமால்

தன. இதில் உள்ள சிறப்பு என்னவென்றால் இவ்வளவு கொடுமைகளையும் அவருக்கு இழைத்த கும்பெனியார் அவரது சிறை வாழ்க்கைச் செலவிற்காக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க மிக தாராளமான மனதுடன் முன்வந்திருப்பது.

கலெக்டர் பவுனியிடமிருந்து கிடைத்துள்ள இந்தச் செய்தியை நேரில் தெரிவிக்க தளபதி பிலாய்டு அரசரது அறைக்கு வந்தார். யாருக்கு யார் பிச்சை அளிப்பது? வந்தவர்களுக்கெல்லாம் வாழ்த்தி, மகிழ்ந்தவர்களுக்கெல்லாம், பொன்னையும், மணியையும், பிடிபிடியாக அள்ளி வழங்கிய கைகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய்-பரம்பரை பரம்பரையாக, சூரிய சந்திரர்கள் நிலைத்திருக்கும் வரை சிறப்பாக வாழ வேண்டும் என்பதற்காக அந்தணர்களுக்கு அகரங்களை சதுர்வேதி மங்கலங்களை, காணிகளை, ஊர்களை தானம் வழங்கிய கைகளுக்கு ஆயிரம் ரூபாய். மண்ணை ஆண்ட மன்னருக்கு நேற்று வந்தவர்கள் தானம் வழங்குவது! நவாப்பின் அனுமதியுடன் வியாபாரம் செய்து பொருள் சம்பாதிக்க வந்தவர்கள், அளவு கோலைப் பிடிப்பதற்குப் பதில் ஆட்சிக்கோலைப் பிடித்துள்ள அவலம். மன்னர் தனது மனக்குமுறல்களை மறைத்துக் கொண்டு கும்பெனியாரிடமிருந்து பிச்சை பெறுவதற்கு தமக்கு விருப்பம் இல்லை என்பதை தளபதியிடம் தெரிவித்தார்.[1] அத்துடன் சென்னைக் கோட்டையிலுள்ள கும்பெனியாரது கவர்னருக்கு தனது உள்ளக் கிளார்ச்சிகளை கட்டுப்படுத்தியவராக தம்மீதுள்ள குற்றச்சாட்டுக்களை வெளியிடுமாறும், நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும், இராமநாதபுரத்தில் கும்பெனியார் நடத்தும் கொடுமைகளை தடுத்து நிறுத்தி ஆணையிடுமாறும் அவர் பல மடல்களில் கோரினார்.[2] அந்த மடல்களின் சில பகுதிகள்.

15.3-1795-ம் தேதியிட்டு அனுப்பிய மடலில்'[3]... அவமானம் விளைவிக்கும் வகையில் எனது ஊரில் எனது அரண்


  1. Revenue consultations, Vol. 64 A, 1795, p. 2278
  2. Revenue consultation, Vol. 62, 15-3-1795, p. 1277. Ibid., Vol. 63, 12-4-1795, pp. 1800-801
  3. Revenue consultations, Vol. 62, 15-3-1795, pp. 1260-79